வேண்டுமென்றே அப்படி செய்கிறார்கள்.. நயன்தாராவை தொடர்ந்து கொந்தளித்த இயக்குநர்.. என்ன ஆச்சு?
சென்னை: நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் வலைப்பேச்சு டீமை குரங்குகள் என்று பேசினார். அவரது அந்தப் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் நயனுக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோரும் தங்களது கருத்தை முன்வைத்துவருகிறார்கள். இந்தச் சூழலில் 96, மெய்யழகன் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கிய பிரேம்குமார் பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.
நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பு அவரையே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நயனும், விக்கியும் தங்களது கரியரில் பிஸியாக இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் LIK என்ற படத்தையும் இயக்கிவருகிறார். நயனோ மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். ஹிந்தியிலும் அவர் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்ப புள்ளி: சூழல் இப்படி இருக்க நயன் சந்தித்த பிரச்னைகள், அனுபவங்கள், அவரது திருமண காட்சிகள் உள்ளிட்டவைகளை தொகுத்து Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப் படம் உருவானது. அதில் நானும் ரௌடிதான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஃபுட்டேஜ் மற்றும் இசை உள்ளிட்டவைகளை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இருந்தாலும் ஆவணப் படத்தின் ட்ரெய்லரில் மூன்று நொடி காட்சிகள் இடம்பெற்றன.
கடிதம் எழுதிய நயன்: இதனால் கோபமான தனுஷ் பத்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நயனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து நயன்தாராவோ தனுஷை கடுமையாக விமர்சனம் செய்து மூன்று பக்க அளவில் கடிதம் எழுதியிருந்தார். அதில் தனுஷ் அவரது தந்தை, அண்ணனின் துணையோடுதான் இந்த இடத்துக்கு வந்திருப்பதாக பல விஷயங்களை பேசினார். அது நயனுக்கு ஆரம்பத்தில் ஆதரவை பெற்றுக்கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல கடும் கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது.
வழக்கு போட்ட தனுஷ்: இதனையடுத்து அந்த ஆவணப் படத்தில் 37 நொடிகள்வரை காட்சிகளையும் பயன்படுத்தியிருந்தார்கள். இது பெரும் அதிர்ச்சியை கிளப்பிய சூழலில் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் நயனை மீண்டும் சர்ச்சை வளையத்துக்குள் தள்ளியது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் நயன் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் வலைப்பேச்சு டீமை குரங்குகள் என்று பேசியிருந்தார். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவருக்கு எதிராக தங்களது நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.
பிரேம் பேட்டி: இந்நிலையில் 96, மெய்யழகன் ஆகிய படங்களின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பிரேம்குமார் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், "96 படத்தில் நான் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியபோது; அதற்கு நான் ரைட்ஸ் வாங்கவில்லை என்று பேசினார்கள். உடனே நான் அவர்களை தொடர்புகொண்டு உங்களுக்கு யார் சொன்னார்கள் என்று கேட்டேன். உடனே அவர்கள் சார், சார் என்று சொல்லி சமாளித்தார்கள். நாங்கள் ரைட்ஸ் வாங்கியிருக்கிறோம் என்று அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் அவர்கள் நெகட்டிவ்வாகவே பேசிக்கொண்டிருப்பார்கள்.
அதாவது நாங்கள் அவர்களுடன் ஒரு Understanding வரும்வரை அவர்கள் இப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும். அவர்களை போல் யூடியூப் சேனலா வைத்திருக்கிறோம். உடனடியாக பதில் சொல்வதற்கு. இப்படித்தான் அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரேம் வலைப்பேச்சு டீமைத்தான் சொல்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











