மெய்யழகன் படத்தை தொடர்ந்து 96 பார்ட் 2க்கு தயாராகும் பிரேம்குமார்... கதைக்களம் என்ன தெரியுமா!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியான 96 படத்தை இயக்குநர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். இந்த படம் பல்வேறு வகையிலும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு படம் உள்ளானது. இந்த படத்தை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடுத்த படமான மெய்யழகன் படத்தை இயக்குநர் பிரேம்குமார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அடுத்ததாக 96 படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளில் பிரேம்குமார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

premkumar vijay sethupathi 96 part 2 movie 96 2


96 படம்: நடிகர் விஜய் சேதுபதி -திரிஷா கூட்டணியில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான 96 படத்தை இயக்குநர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை இந்தப்படத்தின்மூலம் அவர் கவர்ந்திருந்தார். இந்த படம் ஏராளமான ரசிகர்களுக்கு தங்களது கல்லூரி காலகட்டம், முதல் காதல் உள்ளிட்டவற்றை நினைவு படுத்தியதை மறுக்க முடியாது. இவை மட்டுமில்லாமல் நீண்ட காலங்களுக்கு பிறகு தங்களது பள்ளி நண்பர்களை சந்திக்கும் நிகழ்வையும் இந்த படத்தில் பிரதானப்படுத்தியிருந்தார் பிரேம்குமார். ஒவ்வொருவருக்கும் அவர்களது வாழ்க்கையில் பல நிகழ்வுகளை இந்த படம் நினைவு படுத்தியது.

ரசிகர்கள் கொண்டாடிய 96 படம்: அந்த வகையில் எந்தவிதமான கவர்ச்சி உள்ளிட்ட விஷயங்களையும் இணைக்காமல் ஒரு அருமையான படத்தை ரசிகர்கள் விரும்பும் வகையில் கொடுக்க முடியும் என்பதை 96 படம் மூலம் நிரூபித்திருந்தார் பிரேம்குமார். இந்தப்படம் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளான நிலையிலும் 6 ஆண்டுகள் கழித்தே அவர் தன்னுடைய அடுத்த படமான மெய்யழகன் படத்தை கொடுத்திருந்தார். குடும்ப உறவுகளின் மகத்துவத்தை பேசும் இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர தவறியது.

மெய்யழகன் படம்: மெய்யழகன் படத்தின் நீளம் 3 மணி நேரத்திற்கு இருந்ததால் இந்த படம் இழுவையாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து படத்தின் நீளத்தில் 18 நிமிட காட்சிகளை ட்ரீம் செய்து படக்குழுவினர் வெளியிட்டனர். இருந்த போதிலும் படம் ரசிகர்களை கவரவில்லை. மெய்யழகன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரேம்குமார் 96 படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளதாக முன்னதாக மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷன்களின் போதே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

96 பார்ட் 2விற்கு தயாராகும் பிரேம்குமார்: 96 படத்தின் பார்ட் 2வாக உருவாகவுள்ள இந்தப்படத்தின் கதைக்களம் சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் நடக்கும்படியாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் படத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தில் வெளிநாட்டிலிருந்து திரிஷா தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களை சந்திப்பதற்காக வருவதாக கதைக்களம் அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இந்த படத்தின் ஸ்டோரி அமைக்கப்படுவதால் விஜய் சேதுபதி அங்கு செல்வாரா என்பதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் 96 பார்ட் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X