இவர் கதை எழுதினால் மழை பெய்யும்.. இரவு நேரத்துல என்ன பண்ணுவீங்க.. பங்கம் செய்த தேவதர்ஷினி

சென்னை: விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. இப்படம் வெளியாவதற்கு முன்பு பிரிவியூவ் ஷோ திரையிடப்பட்டது. அப்போது 96 படத்தை பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுது, சிரித்து, மறக்க முடியாத நினைவுகளை சுமந்து சென்று மீண்டும் மீண்டும் இப்படத்தை கண்டு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என தெரிவித்தார்கள். இந்நிலையில், 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் பற்றி ஒரு நடிகை கூறியிருப்பது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை கேட்டு என்ன மனுஷன்யா நீ என உச்சு கொட்ட தொடங்கிவிட்டனர்.

இயக்குநர் பிரேம்குமார் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட. ஆனால், அவர் இயக்கிய முதல் படமான 96 எல்லோருடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் மொழி தெரியாவிட்டாலும் அதன் உணர்வுகளை புரிந்து பிற மாநிலத்தவர்களும் கண்டு ரசித்து கண்ணீர் விட்டனர். தனது பள்ளிப்பருவ காதலை நினைத்து வாடாத மனிதர்களே இல்லை. விஜய் சேதுபதிக்கும், த்ரிஷாவிற்கும் நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் ஒரு இரவில் நடப்பது போன்றே காட்சியமைத்திருப்பார் இயக்குநர் பிரேம்குமார். இதில், மழையும் , குளிரும் காதலும் பார்வையாளர்களோடு கடந்தே செல்கிறது.

director-premkumar-wins-award-for-meiyazhagan

96 படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் என்ற படத்தை இயக்கியிருந்தார். 96 படத்தை போன்றே இப்படமும் இரவில் இரண்டு ஆண்கள் சந்தித்து பேசிக்கொள்ளும் காட்சியாக கதை நீளும். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்திருந்தனர்.

இரவின் காதலன்: இவர் இயக்கிய 2 படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு படங்களும் இரவிலேயே கதை தொடர்கிறது. பார்ப்பவர்களுக்கும் ரம்மியமான அழகை தருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த உரையாடலின் போது நீயா நானா கோபிநாத் இயக்குநர் பிரேம் குமாரிடம் நீங்கள் எடுத்த 2 படங்களுமே இரவில் டிராவல் ஆகிறது. அப்படி என்ன கனெக்சன் இருக்கிறது என கேள்வி கேட்பார். அதற்கு பிரேம்குமார் அசத்தும் வகையில் பதில் அளித்தார். 96, மெய்யழகன் படம் மட்டும் அல்ல, இதேபோன்று நான் எழுதிய 3 கதைகளும் இரவில் நடப்பது போன்று தான் எழுதியிருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

director-premkumar-wins-award-for-meiyazhagan

செம்பருத்தி செடியில் செம்பருத்தி: ஒவ்வொரு இயக்குநருக்கும் தனித்துவம் இருக்கிறது. ஆனால், இரண்டு தனிமனிதர்களின் உரையாடலை ஒரு கதையாகவும் படமாகவும் எடுக்க முடியும் என்கிற வித்தையை எங்கு கற்றுகொண்டீர்கள் என கோபிநாத் பிரேம்குமாரிடம் கேள்வியாக கேட்டார். அதற்கு ரொம்ப சிம்பிளாக பதில் அளித்த பிரேம்குமார். இதில் எதுவும் துணிச்சல் என்று கூற வரலை. எனக்கு இதுதான் எடுக்க வருகிறது. இதை பற்றி விஜய் சேதுபதியிடம் பேசும் போது சிரித்து விட்டார். செம்பருத்தி செடியில் செம்பருத்தி பூ தானே வருகிறது. அது மாதிரிதான் எனக்கு இப்படி எடுக்க பிடித்திருக்கிறது என பிரேம்குமார் தெரிவித்தார்.

director-premkumar-wins-award-for-meiyazhagan

கதை எழுதினால் மழை பெய்யும்: பின்பு 96, மெய்யழகன் படத்தில் நடித்த தேவதர்ஷினி பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது. பிரேம்குமார் சார் கதை எழுதினால் மழை பெய்யும். அந்தமாதிரி நிறைய விசயம் இருக்கு. மழை பெய்தால் இவருக்கு போன் செய்து என்ன சார் ஸ்கிரிப்ட் எழுதுறீங்களா கேட்பேன். அந்தமாதிரி இரவுக்கும் இவருக்கும் இப்படித்தான் இருக்கு என தேவதர்ஷினி தெரிவித்தார். பின்பு பேசிய பிரேம்குமார் இரவுல எல்லோரும் தூங்கியிருப்பாங்க, ரொம்ப நேரம் பேச வேண்டியது இல்லை. நமக்கான நேரமாக இருக்கும் என அவர் தெரிவித்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா ஓஹோ என பாராட்டி வருகின்றனர். நீங்க இரவின் காதலனா இருங்க அதுதான் எங்களுக்கு பிடித்திருக்கிறது என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X