மோகன்லாலின் லூசிபர் வெற்றி… 3 பாகங்களாக வெளியிட பிருத்விராஜ் பிளான்

சென்னை: மோகன்லால் அரசியல்வாதியாக நடித்த லூசிஃபர் திரைப்படம் கேரளாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. லூசிஃபர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை முத்தொகுப்பாகத் வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளார் இயக்குநர் பிருத்விராஜ். இந்த படத்தில் பணிபுரிந்த அதே கூட்டணி எம்பூரான் என்ற பெயரில் இரண்டாம் பகுதியை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பெயரில் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது இப்போது ட்ரெண்ட். மலையாள பட உலகிலும் இந்த ட்ரெண்ட் இப்போது உருவாகிறது. மோகன்லால் அரசியல்வாதியாக நடித்த லூசிஃபர் திரைப்படம் கேரளாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை வாரி குவித்ததால் இப்படம் வெளி நாடுகளிலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது.

அறிமுக இயக்குநரான நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய இப்படத்திற்கு திரையுலகில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை பிருத்விராஜ். லூசிஃபர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை முத்தொகுப்பாகத் வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளார் பிருத்விராஜ். இந்த படத்தில் பணிபுரிந்த அதே கூட்டணி எம்பூரான் என்ற பெயரில் இரண்டாம் பகுதியை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை ஒரு திரைப்பட நிகழ்வின் போது உறுதிப்படுத்தினார் இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன்.

மோகன்லால்

மோகன்லால்

ஆஷிர்வாட் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பவூர் தயாரித்த லூசிஃபர் திரைப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், இந்திரஜித், டோவினோ தாமஸ் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்த இப்படத்தை சம்ஜித் எடிட்டிங் செய்துள்ளார். மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள இந்த படம் இரண்டாம் பாகம் தயாராகிறது. அதே கூட்டணி இதிலும் தொடரும் என்று படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

லூசிஃபர்

லூசிஃபர்

லூசிஃபர் திரைப்படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிய முரளி கோபியே அதன் மற்ற இரண்டு பாகங்களுக்கும் ஸ்கிரிப்ட் எழுதுவார் என இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன் அறிவித்துள்ளார். இப்படம் 2020ஆம் ஆண்டு மத்தியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம்

மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம்

மோகன்லால் லூசிபரின் அடுத்த பாகத்தில் நடிப்பதோடு மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரியதர்ஷன் இயக்கும் மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரைக்கார் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம். 16 ஆம் நூற்றாண்டில் கடற்படைத் தலைவர்களை குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர்.

மோகன்லால் பிஸி

மோகன்லால் பிஸி

அந்த சகாப்தத்தில் நான்கு குஞ்சலி மரைக்கார்கள் இருந்தனர். அவற்றில் நான்காவது குஞ்சலி மரைக்கார் மிகவும் வீரம் மிக்கவராக இருந்தார். இந்த கடற்படைத் தலைவர்கள் போர்த்துகீசிய இராணுவத்திற்கு எதிராக போரிட்டனர். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் தான் மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம். இத்திரைப்படம் தவிர வேறு சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் மோகன் லால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X