'என்னை அவுட்டேட்டட்னு நினைச்சிருப்பாங்க..' நடிக்க மறுத்த இளம் ஹீரோக்கள்..பிரபல இயக்குனர் வருத்தம்!
சென்னை: இளம் ஹீரோக்கள் தனது படங்களில் நடிக்க மறுத்ததாக பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழில், சின்னமணிக்குயிலே, கோபுர வாசலிலே, லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர் உட்பட பல படங்களை இயக்கியவர், பிரியதர்ஷன்.
இந்தியிலும் பல படங்களை இயக்கி இருக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என 95 படங்களை இயக்கியுள்ளார்.

மரைக்காயர்
இப்போது மலையாளத்தில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.

மஞ்சு வாரியர்
குஞ்சலி மரைக்காயராக பிரபல ஹீரோ மோகன்லால் நடித்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடித்துள்ளனர். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.

ஹங்கம்மா 2
இந்தப் படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை அடுத்து இயக்குனர் பிரியதர்ஷன், இந்தியில் ஹங்கம்மா 2 படத்தை இயக்குகிறார். இதில் மீஸான் ஜாஃபரி ஹீரோவாக நடிக்கிறார். ஷில்பா ஷெட்டி, பிரணிதா சுபாஷ், பரேஸ் ராவல் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஆர்வம் காட்டவில்லை
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க இளம் இந்தி ஹீரோக்களான கார்த்திக் ஆர்யன், அயுஷ்மன் குரானா, சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, அவர்கள் மறுத்ததற்கான காரணம் தெரியவில்லை. ஒரு வேளை காலாவதியான இயக்குனர் என்று நினைத்திருக்கலாம்.

குழப்பங்களின் காமெடி
ஏனென்றால் நான் 5 வருடங்களாக இந்தி படம் பண்ணவில்லை. அதனால் மீஸான் ஜாஃபரியை நடிக்க வைத்தேன்' என்றார். பிறகு ஹங்கம்மா 2 படம் பற்றி பேசிய பிரியதர்ஷன், தவறானப் புரிதல் மற்றும் குழப்பங்களை வைத்து ஹங்கம்மா படத்தை காமெடியாக எடுத்திருந்தேன். இதுவும் அப்படித்தான். ஆனால், கதை வேறுவிதமாக இருக்கும்' என்றார்.


Click it and Unblock the Notifications











