இயக்குனர் பிரியதர்ஷனிடம் இருந்து விவாகரத்து கோரும் லிசி: ரூ.80 கோடியும் கேட்கிறார்
சென்னை: இயக்குனர் பிரியதர்ஷனும், அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான லிசியும் விவாகரத்து செய்துகொள்ளப் போகிறார்களாம்.
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் நடிகை லிசியை கடந்த 1990ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு லிசி படங்களில் நடிப்பதை நிறுத்தினார். திரைநட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியான சிசிஎல்-இல் பிரியதர்ஷனுக்கு சொந்தமான அம்மாஸ் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியை லிசி தான் நிர்வகித்து வந்தார்.
மேலும் பிரியதர்ஷனுக்கு சொந்தமான சவுண்டு ஸ்டுடியோவான போர் பிரேம்ஸையும் லிசி தான் நிர்வகித்து வந்தார்.

விவாகரத்து
14 ஆண்டுகளாக கணவன், மனைவியாக இருந்த பிரியதர்ஷனும், லிசியும் விவாகரத்து செய்யப் போகிறார்களாம். அவர்களை சமாதானம் செய்ய முயன்ற மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவரின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாம்.

காரணம் என்ன?
சிசிஎல் போட்டிகளில் விளையாடும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியில் உள்ள ஒரு வாலிபருக்கும் லிசிக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பு தான் விவாகரத்திற்கு காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

லிசி பிடிவாதம்
விவாகரத்தை தவிர்க்க பிரியதர்ஷன் பக்கத்தினர் எவ்வளவோ முயன்றும் லிசி தான் பிரிந்து செல்வதில் பிடிவாதாமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. அதனால் அவர்கள் பிரிவது உறுதியாகியுள்ளது.

ரூ.80 கோடி
பிரியதர்ஷனை பிரிந்து செல்லும் லிசி தனது கணவரிடம் இருந்து ரூ.80 கோடி கேட்டுள்ளாராம். தன்னுடைய தலைமையில் தான் பிரியதர்ஷனின் வியாபாரம் நன்றாக நடந்ததால் ரூ.80 கோடி தனது கடின உழைப்புக்கான பங்கு என்கிறார் லிசி.

குழந்தைகள்
பிரியதர்ஷன்- லிசி தம்பதிக்கு கல்யாணி என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். கணவனும், மனைவியும் சென்னையில் வசிக்கின்றனர். குழந்தைகள் இருவரும் சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











