சபரிமலை விவகாரம்: பிரபல இயக்குனர் மீது சாணம் வீசி தாக்குதல்

By Siva

திருச்சூர்: பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட பிரபல மலையாள இயக்குனர் மீது சாணத்தை வீசி தாக்கியுள்ளனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல மலையாள இயக்குனர் பிரியநந்தனன். அவர் இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

Director Priyanandanan attacked over Sabarimala issue

சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களை தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அவர். இந்நிலையில் திருச்சூரில் உள்ள அவர் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மீது ஒருவர் சாணத்தை வீசி தாக்கியுள்ளார்.

பிரியநந்தனனின் தாக்குதலை கண்டித்துள்ள கேரள முதல்வர் பினரயி விஜயன் இதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிரியநந்தனன் கூறியிருப்பதாவது,

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு நான் ஆதரவு தெரிவித்த உடனே பாஜகவினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் மேலும் என் வீட்டின் அருகே போராட்டமும் நடத்தினார்கள். நான் வீட்டை விட்டு வெளியே வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். தற்போது ஒருவர் என் மீது சாணத்தை வீசி பக்கெட்டால் தாக்கினார். இது குறித்து நான் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் தாக்கப்பட்டுள்ளது மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X