உருவ கேலி செய்த தொகுப்பாளர்.. மூக்கை உடைத்து சரியான பதில் அளித்த அட்லீ!

சென்னை: வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த 'பேபி ஜான்' படத்தை தயாரித்து இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் அட்லீ. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1‌ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் ப்ரோமேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீ, உருவ கேலி செய்த தயாரிப்பாளருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் நடித்த தெறி திரைப்படம் இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமன் இசையமைத்து இருக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

atlee baby john

உருவ கேலி: இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேபி ஜான் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கபில் சர்மா, அட்லீயிடம் முதல் முறையாக ஒரு ஸ்டாரை நீங்கள் சந்திக்கும் போது அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா? என்று உருவக் கேலி செய்யும் வகையிலும் திறந்த கேலி செய்யும் வகையிலும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்வி அட்லீக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சரியான பதிலடி: உங்கள் கேள்வியின் நோக்கத்தை என்ன என்று என்னால், புரிந்து கொள்ள முடிகிறது. அந்த உள்நோக்கமான கேள்விக்கு நான் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன். இந்த நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்குத்தான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனென்றால் அவர் தான் என்னுடைய முதல் படத்தை தயாரித்தவர். அவர் என்னுடைய என்னுடைய கதையை மட்டுமே கேட்டார். அதைத் தவிர நான் எப்படி இருக்கிறேன், இதை என்னால் செய்ய முடியுமா... இல்லையா என பார்க்கவில்லை. , அவர் என் மீது நம்பிக்கை வைத்தார்.

இதைப் போலத்தான் உலகத்தையும் நாம் பார்க்க வேண்டும். யாரையும் அவர்களின் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களின் திறமையை வைத்து மதிப்பிட வேண்டும் என்று அந்த தொகுப்பாளரின் மூக்கை உடைக்கும் வகையில் சரியான பதில் கொடுத்துள்ளார். அட்லீயின் இந்த நெத்தியடி பதிலுக்கு இணையத்தில் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X