சர்தார் 2 விரைவில்..மிரட்டலான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சென்னை : சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக மிரட்டலான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ந் தேதி வெளியானது.

இதில் கார்த்தி ஜோடியாக ராசி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா, பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே, முரளி ஷர்மா, முனிஷ்காந்த், இளவரசு மற்றும் யூகி சேது ஆகியோர் நடித்துள்ளனர்.

சர்தார்

சர்தார்

பொன்னியின் செல்வன் படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்த திரைப்படம் சர்தார். இதில், அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரியும் விஜய பிரகாஷ் ஒரு பப்ளிசிட்டி விரும்பி. காவல்துறை குறித்த ஒரு விஷயம் ட்விட்டரில் டிரெண்டானால் அதற்கு அவரே காரணமாக இருப்பார். அப்படி ஒரு விளம்பரத்துக்காக தன் பார்வைக்கு வரும் ஒரு தேசத்துரோக வழக்கைக் கையில் எடுக்கிறார். முதல் பாதியில் சர்தார் யார்? தண்ணீரால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை படம் விரிவாக அலசுகிறது.

பல கோடி வசூல்

பல கோடி வசூல்

சர்தார் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 6.4 கோடி வசூலையும் உலகம் முழுவதும் 9.4 கோடி வசூலையும் பெற்றிருந்தது. தீபாவளி பாண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் 10.25 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 1.8 கோடியும் உலகளவில் ஒட்டுமொத்தமாக 13.45 கோடி வசூலாகி உள்ளது. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சர்தார் படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 34.25 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது.

சர்தார் 2 விரைவில்

சர்தார் 2 விரைவில்

இந்நிலையில், சென்னையில் நேற்று சர்தார் திரைப்படத்தின் வெற்றி விழாவில், சர்தார் 2 படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாகவும் ,அது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மித்ரன், இந்த படத்திற்காக அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம்.

கார்த்தியின் கடுமையான உழைப்பு

கார்த்தியின் கடுமையான உழைப்பு

திரைக்கதை அமைப்பது, படப்பிடிப்பு நேரத்தில் பலவிதமான சிரமங்கள் இருந்தன. மேலும், இப்படத்திற்காக கார்த்தி கடுமையான உழைப்பை கொடுத்து இருக்கிறார். இதற்காக பாராட்டுத்தான் சர்தார் திரைப்படத்தின் வெற்றி என்றார். இந்த வெற்றி விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சஸ் எஸ் லக்ஷமன், ஜிபி பிரகாஷ்,கார்த்தி, இயக்குநர் மித்ரன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X