ரஜினி படம் பார்த்து தான் சிகரெட் புடிச்சேன்.. விஜய்யை மறைமுகமாக தாக்கிய பி.எஸ். மித்ரன்!

சென்னை: இயக்குநர் பி.எஸ். மித்ரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் தம் அடிக்கிற ஸ்டைலை பார்த்துத் தான் சிகரெட் பிடிக்கவே ஆரம்பித்தேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

சினிமாவை சினிமாவா பாருங்க என லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லும் போது சினிமா நடிகரை மட்டும் ஏன் அரசியல்வாதியாகவோ மக்கள் தலைவனாகவோ ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்கிற கேள்வியையும் பலர் எழுப்பினர்.

Director PS Mithran says Rajinikanth is the main reason for his smoking habit

சினிமா மூலமாக சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அது ஒரே நாளில் ஏற்படாது என்றும் படிப்படையாக நடக்கும் என பி.எஸ். மித்ரன் பேசியுள்ளார்.

8000 கோடி: இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பி.எஸ். மித்ரன் முதல் படத்திலேயே விஷால், அர்ஜுனை வைத்து தரமான சம்பவத்தை செய்து பலரையும் வியக்க வைத்தார். அந்த படத்திற்கான கரு தனக்கு ஒருவரிடம் இருந்து கிடைத்ததாகவும் அவர் சுமார் 800 கோடி மோசடி செய்து அப்படி வாழ்ந்து வந்தது தெரிந்தது. 8000 கோடி திருடினாலும் 80 ரூபாய் திருடினாலும் ஒண்ணுதான் எல்லாத்துக்கும் 420 பிரிவு மட்டும் தான் என அவர் சொன்ன அந்த வார்த்தை தான் இரும்புத்திரை உருவாக காரணம் என்றார்.

ரஜினியை பார்த்து தான் சிகரெட் பிடித்தேன்: அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் செம ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதை பார்த்து தான் நானும் சிகரெட் பிடித்தேன். சினிமா நிச்சயமாக சமூகத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், அது ஒரே நாளில் இருக்காது என்றும் பல காலங்களை எடுத்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

விஜய்க்கு பதிலடி: பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் கூடத்தான் டாஸ்மாக் இருக்கு, மாணவர்கள் என்ன ரெண்டு ரவுண்டு போட்டு விட்டா ஸ்கூலுக்கு போறாங்க என்றும் நான் சிகரெட் பிடிச்சா என் ரசிகர்கள் பிடிக்க மாட்டாங்க என விஜய் லியோ வெற்றி விழாவில் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மித்ரன் பேசியுள்ளார்.

பல இடங்களில் பள்ளி மாணவிகளே சரக்கு அடிக்கும் வீடியோக்களே சோஷியல் மீடியாவில் வலம் வருவதை எல்லாம் விஜய் பார்க்கவில்லையோ என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய்யை பார்த்து குழந்தைகள் அதை போலவே ஆட்டம் போடும் நிலையில், அவரை பார்த்து இளைஞர்கள் தம் அடிக்க மாட்டார்களா? சரக்கு அடிக்க மாட்டார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X