சூரியின் கொட்டுக்காளி.. எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்.. ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: கூழாங்கல் படத்தின் மூலம் பல விருதுகளை பெற்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி உள்ள திரைப்படம் கொட்டுக்காளி.சூரி நாயகனாக நடித்துள்ள இத்திரைப்படம் தியேட்டரில் இன்று வெளியாகி உள்ள நிலையில் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து கருடன் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து தற்போது, சூரியின் நடிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் வெளியாகி உள்ளது.இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். மேலும், இப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென் லீட் ரோலில் நடித்துள்ளார். சூரி, அன்னா பென் தவிர யாரும் தெரிந்த முகங்கள் கிடையாது. எனினும் படத்தில் நடித்த அனைவருமே மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

படத்தின் கதை: மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மீனா (அன்னா பென்) இவர் எந்த நேரமும் எதையோ வெறித்துப்பார்த்துக் கொண்டு இருப்பதால், இவரது குடும்பத்தினர் மீனாவிற்கு பேய் பிடித்திருப்பதாக நம்புகின்றனர். இதனால், வருங்கால கணவரான பாண்டி (சூரி) மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் மீனாவிற்கு பேய் பிடித்ததா? அவருக்கு என்ன பிரச்சினை? என்பது தான் கொட்டுக்காளி படத்தின் கதை

சும்மா உருட்டல: படம் பார்த்த ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், சும்மா உருட்டல , என் கண் எதிரே நடந்த ஓர் நெருக்கமான சம்பவத்தை நான், எதிரே நின்று பேச முடியாமல் திணறிய தருணம் அது. நான் அப்போ யோசித்ததை 100℅ உண்மை தான் என்று சொல்லிருக்க திரைப்படம் கொட்டுக்காளி என பதிவிட்டுள்ளார்.

படம் பார்த்த மற்றொரு இணையவாசி, என் அம்மாவோ... என் வாத்தியாரோ கற்றுத்தர முடியாத மற்றும் தெளிவுபடுத்த முடியாத சிந்தனைக்கான பதிலை இந்த கொட்டுக்காளி திரைப்படம் எனக்கு கொடுத்திருக்கிறது. மொத்த டீமுக்கும் எனது நன்றிகள், உலகமே ஓர் நாடக மேடை.. அதில் கதையாசிரியர் நாம் தான்.. அக்கதை எவ்வாறு அமைகிறதோ அவ்வாறே நம் வாழ்வு அமையும் என படத்தை பாராட்டி உள்ளார்.
சிறப்பான முயற்சி: கொட்டுக்காளி படத்தின் மற்றொரு சிறப்பாக, படத்திற்கு இசை கிடையாது. எனினும் கதாபாத்திரங்களை சுற்றி நடப்பவற்றிலிருந்து வரும் சத்தங்களே அந்த குறை தெரியாமல் காப்பாற்றுகின்றன. பின்னணி இசை இருந்திருந்தால் கூட படத்தோடு நம்மால் முழுமையாக ஒன்றியிருக்க முடியுமா என்று தெரியவில்லை என ரசிகர் ஒருவர் பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











