கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி

சென்னை: நீங்க வீட்டுக்கு வெளியில சந்திக்குற பிரச்சனையில ஜெயிக்கணும்னா வீட்டுக்குள்ளாற உங்க வீட்டுக்காரம்மா கிட்ட டோட்டலா சரண்டர் ஆயிடுங்கன்னு, இன்னிக்கு கல்யாண நாளும் அதுவுமா நம்ம டைரக்டர் செல்வமணி முத்தான அட்வைஸ் பண்றார், கேட்டுக்கோங்க.

தமிழ் சினி ஃபீல்டுல நம்ம ரோஜாவுக்காக பல ரசிகர்கள் தவம் இருக்காங்க. இவர் அறிமுகமான படம் செம்பருத்திங்குறது எல்லாருக்கும் தெரியும். இந்த படத்தை டைரக்ட் பண்ணினது நம்ம டைரக்டர் ஆர்.கே.செல்வமணி தாங்க.

ரோஜாவோட கள்ளங்கபடம் இல்லாத அந்த சிரிப்பும் நடனமும் தாங்க அவங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டா அமஞ்சது. கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேலெ தமிழ் சினிஃபீல்டுல ஹீரோயினா நடிச்சி ஜெயிச்சிருக்காங்கன்ன பாத்துக்கோங்க.

திருப்பதின்னா ரோஜா

திருப்பதின்னா ரோஜா

பழனின்னா பஞ்சாமிர்தம், திருநெல்வேலின்னா இருட்டுக்கடை அல்வா, மதுரன்ன மல்லிப்பூ அப்பிடின்னு எல்லோரும் சொல்வாங்க. அது மாதிரிதாங்க திருப்பதின்னா லட்டுன்னுதான் சொல்லுவாங்க. அதாங்க இல்ல. திருப்பதின்னா ரோஜான்னுதான் சொல்லுவாங்க.

ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா

கடந்த 1992ஆவது வருஷம் வரைக்கும், ரோஜான்னு சொன்னாலே நம்ம எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வர்றது, கோட்டு சூட்டு போட்ட நேரு மாமா மட்டுந்தாங்க. ஆனா அந்த வருஷத்துல செம்பருத்தி படம் வந்த பின்னால, தமிழ் நாட்டு இளவட்டங்க எல்லாரும் ரோஜா ரோஜான்னு பினாத்த ஆரம்பிச்சாங்க.

செம்பருத்தி ஆர்.கே.செல்வமணி

செம்பருத்தி ஆர்.கே.செல்வமணி

கேரளா மந்திரவாதிய கூட்டிட்டு வந்து மந்திரிக்காத கொறை தாங்க. அதுக்கப்புறந்தாங்க இந்த காதலும், பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடுற காதலர் தினமெல்லாம் ஞாபகத்துக்கு வரும். தமிழ் சினி ஃபீல்டுல நம்ம ரோஜாவுக்காக பல ரசிகர்கள் தவம் இருக்காங்க. இவர் அறிமுகமான படம் செம்பருத்திங்குறது எல்லாருக்கும் தெரியும். இந்த படத்தை டைரக்ட் பண்ணினது நம்ம டைரக்டர் ஆர்.கே.செல்வமணி தாங்க.

அந்த சிரிப்பு ப்ளஸ் பாய்ண்ட்

அந்த சிரிப்பு ப்ளஸ் பாய்ண்ட்

ரோஜாவோட கள்ளங்கபடம் இல்லாத அந்த சிரிப்பும் நடனமும் தாங்க அவங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டா அமஞ்சது. கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேலெ தமிழ் சினிஃபீல்டுல ஹீரோயினா நடிச்சி ஜெயிச்சிருக்காங்கன்ன பாத்துக்கோங்க.

நாங்க லவ் பண்றோம்

நாங்க லவ் பண்றோம்

டைரக்டர் ஆர்.கே..ல்வமணிக்கும் நம்ம நடிகை ரோஜாவுக்கும் மொத படத்துலயே லவ் ஆரம்பிச்சிரிச்சி. ஆனா தங்களோட காதல அவங்க ஓப்பனா ரொம்ப வருஷங்களுக்கு சொல்லவே இல்லைங்க. எல்லாம் மூடு மந்திரமா தாங்க இருந்திச்சி. ஒரு கால கட்டத்தில் அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் லவ் பண்றத அக்சப்ட் பண்ணி ஏத்துக்கிட்டாங்க. ஒரு வழியா பூனகுட்டி வெளில வந்திடிச்சி.

எல்லாம் ஒரு கணக்குதாங்க

எல்லாம் ஒரு கணக்குதாங்க

ரெண்டு பேரும் போன 2002ஆம் வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கல்யாணத்துக்கு அப்புறம், இவங்க ரெண்டு பேருக்கும் நெறய சண்டை சச்சரவுங்க இருந்தாலும் கூட, அத எல்லாத்தையும் மீறி இன்னிக்கு ரெண்டு பேரும் ரெண்டு பசங்களோட ரொம்ப சந்தோசமான புருஷன் பொண்டாட்டியா இருக்காங்கன்னா, அதுக்கு காரணம், அவங்களுக்குள்ள இருக்குற ஒரு ஆத்மார்த்தமான அண்டர்ஸ்டான்டிங்கும், அட்ஜஸ்ட்மெண்டும் தாங்க.

பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆகுங்க

பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆகுங்க

டைரக்டர் செல்வமணி கூட ஒரு ஃபங்ஷன்ல பேசும்போது இதப்பத்தி சொல்லும்போது, ஆம்பளைங்க வெளில போயி தன்னோட வேலைல ஜெயிக்கணும்னா, தயவுசெஞ்சி வீட்டுல உங்க பொண்டாட்டிங்க கிட்ட தோத்துடுங்க. நான் கூட ஆரம்பத்துல கொஞ்சம் மொரண்டு பிடிச்சேன். ஆனா, அப்புறமா கொஞ்சம் நிதானமா உக்காந்து யோசிச்சேன்.

நீங்க ஜெயிப்பீங்க

நீங்க ஜெயிப்பீங்க

அப்பதாங்க எனக்கு தோணிச்சி, நம்ம ஏன் பொண்டாட்டிக்கு விட்டுக்கொடுத்து, அவங்க கிட்ட சரண்டர் ஆகக்கூடாதுன்னு. உடனே, வீட்டுக்கோ போயி வீட்டுக்காரம்மா கிட்ட சரண்டர் ஆகிட்டேன். அதுக்கப்புறமா எங்களுக்குள்ளாற எந்த சண்டை சச்சரவும் வந்ததில்லைங்க. இதை நீங்களும் ஃபாலோ பண்ணுங்க, நிச்சயமா நீங்க உங்க லைஃப்ல ஜெயிப்பீங்கன்னு பேசுனாரு.

கை தட்டுன சூப்பர்ஸ்டார்

கை தட்டுன சூப்பர்ஸ்டார்

இவரு இப்பிடி பேசி முடிச்ச ஒடனே, இவரு பேச்ச கேட்டுகிட்டு இருந்த ஆடியன்ஸ் எல்லாரும் எந்திரிச்சி கை தட்டுனாங்க. நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி சார் ரொம்ப நேரம் ரசிச்சி ரசிச்சி சிரிச்சி கை தட்டுனாறுங்க. இந்த எதார்த்தமான சின்ன மேட்டர ரொம்ப பேர் புரிஞ்சிக்கிறதே இல்லங்க. இதனாலயே அவங்க தாம்பத்ய வாழ்க்கைல ஜெயிக்கமா, வெளியிலயும் ஜெயிக்காம ரெண்டையும் கோட்டை விட்டுடறாங்க.

திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண நாள் வாழ்த்துக்கள்

நடிகையாக மட்டுமில்லாம அரசியல்லயும் ஜெயிச்ச நம்ம நடிகை ரோஜா டைரக்டர் செல்வமணி தம்பதிக்கு இன்னிக்கு வெட்டிங் டே. இவங்க இன்னிக்கு மாதிரியே இன்னும் ரொம்ப வருஷம் தீர்க்காயுசோட, தீர்க்க சுமங்கலியா இருக்க நம்ம ஆண்டவன வேண்டிக்கவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X