தெருக்கூத்து பின்னணியில் உருவான டப்பாங்குத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சென்னை: தெருக்கூத்துக்களை மையமாக வைத்து உருவாகி வரும் டப்பாங்குத்து திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆர்.முத்து வீரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா, உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை எஸ்.ஜெகநாதன் தயாரிக்கிறார். எஸ்.டி.குணசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

டப்பாங்குத்து: தமிழகத்தில் ஒரு காலத்தில் இந்த டப்பாங்குத்து பிரபலமாக இருந்தது. கோவில் திருவிழாக்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் இந்த டப்பாங்குத்து இடம் பெற்று வந்த நிலையில், அவை காலப்போக்கில் மறைந்து வருகின்றன. அவற்றை நினைவுகூரும் விதமாக டப்பாங்குத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பர்ஸ்ட் லுக் போஸ்டர்: மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் டப்பாங்குத்து படத்தில், 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் இடம் பெறுவது போல, இந்த படத்திற்கும் நேற்று மாலை 5:00 மணிக்கு First Look போஸ்டரை 72 லட்சம் பேர் Subscriber கொண்ட பிரபல சினிமா யூடியூப் சேனல் ஒன்றில் படக்குழு வெளியிட்டது.
தொழில்நுட்ப கலைஞர்கள்: இப்படத்தை எஸ்.ஜெகநாதன் தயாரிக்க, சரவணன் இசையமைத்துள்ளார். மேலும், கதை, திரைக்கதை, வசனம் S.T.குணசேகரன், ஒளிப்பதிவு ராஜா, K.பக்தவத்சலம், நடனம் தீனா, கலை : M.சிவாயாதவ், படத்தொகுப்பு டி.எஸ்.லக்ஷ்மணன், சண்டை பயிற்சி ஆக்சன் பிரகாஷ், நாதன் லீ, ஸ்டில்ஸ் வின்சென்ட், தயாரிப்பு நிர்வாகம் சின்னமணி ஆகியோர் செய்துள்ளனர்.
இயக்குநர் பேச்சு: இப்படம் குறித்து பேசிய இயக்குநர், கரகாட்டம் போல் மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் திருவிழா நாட்களில் தெருக்கூத்து போடுவார்கள். அதில், ராஜா ராணி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலை சிந்து என விதவிதமாக ஆடி பாடி, விடியும் வரை ரசிக்க வைப்பார்கள். அதை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். இத்திரைப்படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











