தளபதியை இயக்க ஆசைப்படும் இயக்குநர் பார்த்திபன்… விரைவில் நடக்கும் என உறுதி

சென்னை : நடிகர் பார்த்திபன் சிறப்பான பல படங்களை இயக்கி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குநாக உள்ளார்.

புதிய பாதை முதல் கொண்டு பல படங்களை இயக்கியுள்ள பார்த்திபன் தன்னுடைய கவிதைகளாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளவர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கி அவரை இயக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குர் பார்த்திபன்

இயக்குர் பார்த்திபன்

நடிகரும் இயக்குநருமான ஆர் பார்த்திபன் சிறப்பான பல படங்களை இயக்கி ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக உள்ளார். புதிய பாதை மூலம் தமிழ் சினிமாவிற்கு புதிய பாதையை வகுத்து கொடுத்தவர் இவர். வித்தியாசமான கதைக்களங்களுட்ன் இவர் இயக்கிய பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இந்திய அளவில் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

ஒத்த செருப்பு படம்

ஒத்த செருப்பு படம்

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தை இவரே தயாரித்து நடித்தும் இருந்தார். படம் முழுவதும் ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே இருக்கும்வகையில் இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் கடந்த 2019ல் வெளியானது.

சிறப்பான பாராட்டு

சிறப்பான பாராட்டு

இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. பல்வேறு விருதுகளையும் தேசிய விருதையும் இந்தப் படம் தட்டி சென்றுள்ளது. மேலும் இந்தப் படத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது இந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் இந்தப் படத்தை ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன்.

விஜய்யை இயக்க ஆசை

விஜய்யை இயக்க ஆசை

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க தனக்கு ஆசையாக உள்ளது என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். அவருக்கு கதை சொல்லி ஓகே வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு கூறியுள்ளது விஜய் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டவர்கள் வில்லனாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இதையடுத்து அடுத்தடுத்த படங்களுக்கு கதைகளை கேட்டு வருகிறார் விஜய். இந்நிலையில் பார்த்திபன் இவ்வாறு தெரிவித்துள்ளது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வம்சி இயக்கத்திற்கு பிறகு விஜய் பார்த்திபன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாரா என்பது குறித்து இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X