நெஞ்சுவலியால் துடித்த ரஜினி பட இயக்குனர்: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம்

By Siva

சென்னை: பிரபல தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் மருமகனும், இயக்குனருமான ஆர். தியாகராஜன் இன்று மரணம் அடைந்தார்.

பிரபல தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பாவின் மருமகன் இயக்குனர் ஆர். தியாகராஜன்(75). சென்னை போரூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

Director R. Thyagarajan no more

இன்று காலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் இழந்துவிட்டார்.

அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகராஜன் ரஜினிகாந்தை வைத்து ரங்கா, தாய் வீடு, அன்புக்கு நான் அடிமை உள்ளிட்ட 11 வெற்றிப் படங்களை கொடுத்தவர்.

ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை உள்ளிட்ட 28 படங்களை இயக்கியவர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X