Parthiban: அன்பு மகளல்ல.. அன்பே மகள்.. பார்த்திபனின் நெகிழ்ச்சிப்பதிவு!
சென்னை: இயக்குநர் பார்த்திபன் தனது மகள் கீர்த்தனாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பார்த்திபன், இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரே ஷாட்டில் நான் லீனியராக எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்தப் படத்திற்கு மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
இயக்குநர் பார்த்திபன்: சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன் தனது மகள் கீர்த்தனாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அன்பு மகளல்ல.. அன்பே மகளாக அருகிருக்க …மனம் மணம் வீசுகிறது என தனது மகள் குறித்து கவிதை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
கன்னத்தில் முத்தமிட்டால்: நடிகர் பார்த்திபன் மற்றும் சீதா தம்பதியினருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகளான கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறுமியாக நடித்திருந்தார். அந்த படத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் ,பிரகாஷ்ராஜ், பசுபதி என பலர் நடித்திருந்தனர்.
நடிகை கீர்த்தனா: அந்த படத்தில் குழந்தையாக கனகச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த கீர்த்தனாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதன் பின் இவர் வளர்ந்து வந்து நடிப்பில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல், மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
திருமணம்: கீர்த்தனாவுக்கும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்ஷய்க்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர் வெளிநாட்டில் படித்து வந்தாலும், தமிழ் பண்பாட்டை மறக்காமல் எப்போதும் புடவை அணிந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். பார்த்திபன் சீதா கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும், மகன் மற்றும் மகள் தந்தை பார்த்திபனுடனே இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











