என்னது! ப்ளு சட்டை மாறனுடன் ஜென்மப் பகையா? பார்த்திபன் புட்டு புட்டு வைத்த காரணங்கள்!

சென்னை: தமிழ் சினிமா விமர்சகர்களில் கொஞ்சம் காட்டமான விமர்சகர் என்றால் அதில் கட்டாயம் ப்ளூ சட்டை மாறனின் பெயர் முதல் இடத்தில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இவர் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி, இன்றைக்கு அதிக ரசிகர்கள் பட்டாளத்தினைக் கொண்டுள்ள விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களை மிகவும் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

இதனாலே இவர் குறித்து பல நடிகர்கள் மறைமுகமாக பேசியுள்ளனர். இப்படியான நிலையில் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் டீன்ஸ் இந்த படத்திற்கான புரோமோசன் பணிகளில் பார்த்திபன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். அப்படி இருக்கும்போது, தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ப்ளூ சட்டை மாறன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்துள்ளார்.

Radhakrishnan Parthiban Blue Sattai Maran Teenz

ஆனால் ப்ளூ சட்டை மாறன் படங்களை காட்டமாக விமர்சிப்பதைப் போல், பார்த்திபனின் இரவின் நிழல் படத்தினை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பார்த்திபன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னரும் கூட, 14 கேள்விகளை அடுக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் ப்ளூ சட்டை மாறன். இதனால் பார்த்திபனும் ப்ளூ சட்டை மாறனும் வரும் காலங்களில் பேசிக்கொள்ளவே வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது.

ஒத்த செருப்பு: குறிப்பாக இரவின் நிழல் படம் குறித்த விவாதத்தின்போது, அதற்கு முன்னர், பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படம் குறித்தும் கேள்விகளை முன்வைத்திருந்தார் ப்ளூ சட்டை. இப்படியான நிலையில்தான் இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவே மாட்டார்கள் எனவும் இவர்களுக்குள் இணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் கூறப்பட்டது.

பார்த்திபன்: ஆனால் பார்த்திபன் டீன்ஸ் படத்தின் புரோமோசனுக்காக, ப்ளூ சட்டை மாறனின் தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் விளம்பரம் கொடுத்திருந்தார். இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பார்த்திபன் தரப்பில் இருந்து, “ நான் ப்ளூ சட்டை மாறனுக்கு மட்டும் விளம்பரம் கொடுக்கவில்லை. வலைபேச்சு மற்றும் இதர யூடியூப் சேனலிலும் விளம்பரம் கொடுத்துள்ளோம். மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு ப்ளூ சட்டை மாறனுக்கு கொடுக்கவில்லை என்றால் எங்கள் இருவருக்கும் ஏதே ஜென்மப் பகை போல் ஆகிவிடாதா. எனக்கு இருக்கும் வசதிக்கு ஏற்ற வகையில் சேனல்களுக்கு விளம்பரங்களைப் பிரிர்த்துக் கொடுத்துள்ளோம்.

ஜென்மப் பகை?: ஒரு படம் குறித்து அவர் விமர்சனம் செய்யும்போது நான் சொல்லாத விஷயத்தை நானே சொன்னதாக நினைத்துக் கொண்டுள்ளார் அவர். அதுதான் பகையே தவிர இருவருக்கும் இடையில் ஜென்மப் பகையெல்லாம் எதுவும் கிடையாது.இதற்கே இப்படிக் கேட்கின்றீர்கள். ஆனந்த விகடன் விருது மேடையில் நான் வெளியேறினேன். ஆனால் அடுத்த ஆண்டு அழைத்தபோது கலந்து கொண்டேன். இந்த முறை அழைத்தார்கள். நேரம் இல்லாததால் செல்லவில்லை” என பதில் அளித்துள்ளார்.

டீன்ஸ்: நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள டீன்ஸ் படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தியன் 2 படத்துடன் இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தினை ரிலீஸ் செய்யும்போதே, இந்தியன் 2 படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் டீன்ஸ் படத்திற்கு வந்தாலே போதும் எனக் கூறியிருந்தார். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X