மகன் திடீர் மரணம்.. உடலை கொண்டுவருவதில் சிக்கல்... காலையில் மெக்கா செல்கிறார் இயக்குனர் ராஜ்கபூர்

By

சென்னை: மரணமடைந்த தனது மகன் உடலை பார்க்க, நடிகர் ராஜ்கபூர் செவ்வாய்க்கிழமை காலையில் மெக்கா செல்கிறார்.

நடிகர் பிரபு கனகா நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்கபூர். நடிகர் அஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்தப் பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்

உத்தமராசா, என்ன விலை அழகே, சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார்.. இவரது கடைசியாக இயக்கிய படம் வம்பு சண்டை.

அரண்மனை 2

அரண்மனை 2

நடிகராகவும் உள்ள ராஜ்கபூர், தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, தென்னவன், அய்யா, ஆறு, அரண்மனை 2, வாகா, மாயாண்டி குடும்பத்தார் உட்பட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும் ஷாருக் கபூர் என்ற மகனும் ஷமீமா, ஷானியா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

புனித பயணம்

புனித பயணம்

இந்நிலையில், ராஜ்கபூரின் மனைவியும் அவரது மகன் ஷாருக் கபூரும் மெக்காவுக்கு புனித பயணம் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு கடுமையான சளி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாகப் பாதிக்கப்பட்டார், ஷாருக். உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஷாருக் தனது உடல்நிலை குறித்து ஆங்கிலத்தில் கூறியது அங்குள்ளவர்களுக்குப் புரியவில்லை என்று கூறப்படுகிறது.

சில நிமிடங்களிலேயே

சில நிமிடங்களிலேயே

இதையடுத்து வேறு டாக்டர்கள் வந்து விசாரித்து சிகிச்சையை ஆரம்பிப்பதற்குள் அவர் உடல் நிலை மோசமானதாகவும் அடுத்த சில நிமிடங் களிலேயே அவர் உயிர், பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மறைந்த ஷாருக் கபூருக்கு வயது 23. இதையடுத்து அவர் மரணமடைந்த தகவல் ராஜ்கபூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சியில்

அதிர்ச்சியில்

தனது ஒரே மகன் மரணமடைந்ததை கேட்டு ராஜ்கபூரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகன் ஷாருக் கபூரை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் ராஜ்கபூர். ஆனால் அதற்குள் ஷாருக் இறந்துவிட்டார். இந்தத் தகவலை கேட்டு ஒட்டு மொத்த திரைத்துறையும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. அவரது உடலை சென்னைக்கு கொண்டு வரும் முயற்சியில் ராஜ்கபூர் ஈடுபட்டார்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை

ஆனால், புனித பயணம் சென்ற இடத்தில் இருந்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்றும் அங்கேயே உடல் அடக்கம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் ராஜ்கபூர், மற்றும் அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் மெக்காவுக்கு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X