Just In
- 39 min ago
குளியல் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்...கவர்ச்சியில் இணையத்தை கதறவிடும் நடிகை
- 1 hr ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 1 hr ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 2 hrs ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
Don't Miss!
- News
சசிகலாவை சந்தித்த சீமான்.. கடைசியில் எடுத்த "தில்" முடிவு.. 7-ம் தேதி இருக்கு கிளைமேக்ஸ்!
- Finance
ரூ.4 லட்சம் கோடி.. ஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்கியது.. ஜியோ - ஏர்டெல் மத்தியில் போட்டி..!
- Lifestyle
ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட்
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை!
சென்னை: இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் தனது 23 வயதில் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
நடிகர் பிரபு நடிகை கனகா நடிப்பில் வெளியான தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கினார்.
உத்தமராசா, சுதந்திரம், என்ன விலை அழகே, சமஸ்தானம், குஸ்தி உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார் ராஜ் கபூர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வம்பு சண்டை.

படங்கள்
இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும் உள்ளார் ராஜ் கபூர். ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சினாதன், தென்னவன், விசில், அய்யா, ஆறு, அரண்மனை 2, வாகா, கொடி, மாயாண்டி குடும்பத்தார், முத்தக்கு முத்தாக உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ராஜ் கபூர். கடைசியாக அவரது நடிப்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது.

ஒரு மகன் 2 மகள்கள்
அதுமட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துள்ளார் ராஜ்கபூர். சன்டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்துள்ளார். அதனை தொடந்து ராசாத்தி சீரியலிலும் நடித்தார். தற்போது ஒளிபரப்பாகும் ரன் சீரியலிலும் நடித்து வருகிறார் ராஜ் கபூர். இவருக்கு ஷைலஜா கபூர் என்ற மனைவியும் ஷாரூக் கபூர் என்ற ஒரு மகனும் மற்றும் ஷமிமா கபூர் மற்றும் ஷானியா கபூர் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

மகன் திடீர் மரணம்
இந்நிலையில் ராஜ்கபூரின் மனைவியும் அவரது மகன் ஷாரூக் கபூரும் மெக்காவுக்கு புனித பயணம் சென்றதாக தெரிகிறது. அங்கு கடுமையான சளி மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ஷாரூக் கபூர் அங்கேயே உயிரிழந்திருக்கிறார். 23 வயதே ஆன ஷாரூக் கபூர் திடீரென மரணமடைந்த தகவல் ராஜ்கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரைத்துறை அதிர்ச்சி
இந்த தகவலை கேட்டு ஒட்டு மொத்த திரைத்துறையும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. அவரது உடலை சென்னைக்கு கொண்டு வரும் முயற்சியில் நடிகர் ராஜ் கபூர் ஈடுபட்டுள்ளார். இதனிடையே மெக்காவில் இருந்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

குஷ்பு குடும்பத்திற்கு நெருக்கம்
தனது ஒரே மகனான ஷாரூக் கபூரை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் ராஜ் கபூர். இந்நிலையில் அவரது திடீர் மரணம் அவரை உலுக்கியிருக்கிறது. மரணமடைந்த ஷாரூக் கபூர், இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.