என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!

சென்னை: பாகுபலி இயக்குநரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் தொடங்குகிறது என இயக்குநர் ராஜமெளலி போட்டுள்ள ட்வீட் திரைத்துறையினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது கிளைமேக்ஸ் ஷூட்டிங்கை நெருங்கியுள்ள தகவல் ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

வசூல் சாம்ராஜ்ஜியம்

வசூல் சாம்ராஜ்ஜியம்

மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தை மக்களுக்கு காட்டி வசூல் சாம்ராஜ்ஜியம் செய்தார் இயக்குநர் ராஜமெளலி. நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தன.

அடுத்த பிரம்மாண்டம்

அடுத்த பிரம்மாண்டம்

பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ராஜமெளலி தனது அடுத்த பிரம்மாண்டமாக ஆர்.ஆர்.ஆர் படத்தை பான் இந்திய படமாக இயக்கி வருகிறார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் என நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் உருவாகி வருகிறது.

ஆலியா பட் பிரச்சனை

ஆலியா பட் பிரச்சனை

பாலிவுட்டில் வெடித்த நெப்போடிசம் பிரச்சனை காரணமாக நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியான சடக் 2 படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவார் என்றும் நீக்கப்பட வேண்டும் எனவும் குரல்கள் எழுந்த நிலையில், ஆலியா பட் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் என வதந்திகளுக்கு ராஜமெளலி முற்றுப்புள்ளி வைத்தார்.

கொரோனா நெகட்டிவ்

கொரோனா நெகட்டிவ்

ஹைதரபாத்தில் நடைபெற்று வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்ட நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, நடிகர் ராம்சரணுக்கு சமீபத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு நெகட்டிவ் என்று வந்தது. இதனால், சீக்கிரம் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொடங்கியது கிளைமேக்ஸ்

தொடங்கியது கிளைமேக்ஸ்

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரைக்கு எப்போது வரும், அந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்கிற கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் கிளைமேக்ஸ் ஷுட்டிங் தொடங்குகிறது என்கிற அறிவிப்பை இயக்குநர் ராஜமெளலி அட்டகாசமாக வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் ரெஃபரன்ஸா

மாஸ்டர் ரெஃபரன்ஸா

ராமராஜு மற்றும் பீம் இருவரது கைகளை மட்டும் காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு இந்த ட்வீட்டை இயக்குநர் ராஜமெளலி பதிவிட்டுள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் கைகள் மட்டும் மோதும் காட்சியின் ரெஃபரன்ஸா என தளபதி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X