Rajamouli: ஓவர் ஆக்டிங் செய்கிறாரா அமீர்கான்.. என்ன இப்படி சொல்லியிருக்காரு ராஜமௌலி!

ஐதராபாத்: பாலிவுட்டின் பிரபல ஹீரோ அமீர்கான் தொடர்ந்து ஹிட் கொடுக்க முடியாமல் உள்ளார்.

இவரது அடுத்தடுத்த படங்கள் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகாமல் உள்ளார்.

Director Rajamouli comments that Aamir khan overacting in Laal singh satta movie

அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான லால் சிங் சத்தா மிகப்பெரிய தோல்வியை அவருக்கு கொடுத்துள்ளது.

பாலிவுட் நடிகர் அமீர்கானின் நடிப்பை விமர்சித்த ராஜமௌலி: நடிகர் அமீர்கான் பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஒருவராக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 30 ஆண்டுகளை கடந்து இவர் பாலிவுட்டில் தன்னுடைய வெற்றிப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். சமூக அக்கறையுடன் படங்களை கொடுத்து வரும் நடிகராக இவர் காணப்படுகிறார். ஆனால் அமீர்கானின் கடந்த சில படங்கள் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் கடந்த ஆண்டில் வெளியான லால் சிங் சத்தா படம் படுதோல்வி அடைந்தது.

கடந்த 1994ம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் ஆஸ்கர்களை அள்ளிய நிலையில், இந்தப் படத்தை 25 ஆண்டுகள் கழித்து லால் சிங் சத்தா மூலம் ரீமேக் செய்திருந்தார் அமீர்கான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியானது. தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது. இதற்கான ப்ரமோஷன்களுக்காக சென்னை வந்திருந்தார் அமீர்கான்.

இந்நிலையில் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் சொதப்பியது. அமீர்கான் கேரியரில் மிகவும் படுதோல்வி அடைந்த படமாக மாறியது. படத்தின் பட்ஜெட்டை கூட வசூலிக்க முடியாமல் ப்ளாப் ஆனது. தன்னுடைய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகாமல் உள்ளார் அமீர்கான். இந்நிலையில் இந்தப் படத்தில் அமீர்கான் ஓவர் ஆக்டிங் செய்துள்ளதாகவும் அதனால்தான் படம் வெற்றிப் பெறவில்லை என்றும் பிரபல இயக்குநர் ராஜமௌலி விமர்சித்துள்ளார்.

அமீர்கானின் உறவினர் மன்சூர் கானிடம் ராஜமௌலி இந்தக் கருத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் மன்சூர் கான் தெரிவித்துள்ளார். பஞ்சாபை மையமாக கொண்டு லால் சிங் சத்தா படம் வெளியானது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. முன்பதிவுகளிலும் அதிரடியாக இருந்தது படம். வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை அமீர்கான், தன்னுடைய அமீர்கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார்.

ராணுவ வீரரின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த லால் சிங் சத்தா படத்தில் கரீனா கபூர், நாக சைத்தன்யா போன்றவர்களும் இணைந்திருந்தனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியான நிலையில், படத்தின் ரிலீசின்போது பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து வலைதளங்களில் பரப்பப்பட்டது. இதுவும் இந்தப் படத்தின் ப்ளாப்பிற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X