twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் ராஜமெளலிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்... ஆர்ஆர்ஆர் படம் பெற்றுக் கொடுத்த சிறப்பு!

    |

    சென்னை : பிரபல இயக்குநர் ராஜமௌலி பாகுபலி படங்களின்மூலம் சிறந்த இயக்குநராக சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றவர்.

    பிரம்மாண்டமான படங்களை இயக்குவதில் சிறப்பானவராக திகழ்ந்துவரும் ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் என்ற படம் வெளியானது.

    சுதந்திர காலகட்டத்தை மையமாக கொண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்ற நிலையில், தற்போது ஆஸ்கர் போட்டியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது

    இயக்குநர் ராஜமௌலி

    இயக்குநர் ராஜமௌலி

    பிரபல இயக்குநர் ராஜமௌலி பாகுபலி படங்களை இயக்கியதன்மூலம் சர்வதேச அளவில் தன்னை சிறந்த இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களும் சிறப்பாக அமைந்தன. வரலாற்றுப் பின்னணியில் வெளியான இந்தப் படம், நம்மை அந்தக் காலகட்டத்தை உணர வைத்தன.

    பிரம்மாண்ட படங்கள்

    பிரம்மாண்ட படங்கள்

    ஒவ்வொரு ப்ரேமிலும் பிரம்மாண்டத்தை இழையோட வைத்திருந்தார் ராஜமௌலி. படத்தின் ஒவ்வொரு காட்சியும், கேரக்டர்களும் ரசிகர்களை கொண்டாட வைத்தது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படம் வெளியானது. ராம்சரண் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இந்தப் படம் சுதந்திர காலகட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

    ரூ.1000 கோடியை வசூலித்த ஆர்ஆர்ஆர்

    ரூ.1000 கோடியை வசூலித்த ஆர்ஆர்ஆர்

    இவரது முந்தைய படங்களை போலவே ஆர்ஆர்ஆர் படமும் சர்வதேச அளவில் 1000 கோடி ரூபாய்களை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று வருகிறது. தொடர்ந்து அடுத்தப்படத்தை மகேஷ்பாபுவை ஹீரோவாக வைத்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராஜமௌலி துவக்கவுள்ள நிலையில், முந்தைய படமான ஆர்ஆர்ஆர் அவருக்கு சிறப்பான அந்தஸ்தை சர்வதேச அளவில் கொடுத்து வருகிறது.

    சிறந்த இயக்குநர் விருது

    சிறந்த இயக்குநர் விருது

    தற்போது தி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் சார்பாக ஆர்ஆர்ஆர் பட இயக்குநர் ராஜமௌலிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆஸ்கர் ரேசிலும் உள்ள நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் பேட்டியொன்றில் ராஜமௌலி தெரிவித்திருந்தார். ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருந்தனர். இவர்களது நடிப்பில் இந்தப் படம் மிகச்சிறந்த படமாக வெளியானது.

     ராஜமௌலியின் கனவு

    ராஜமௌலியின் கனவு

    வரலாற்றுப் பின்னணியில் தொடர்ந்து படங்களை கொடுத்துவந்த இயக்குநர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தில் சுதந்திர காலகட்டத்தை மையமாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து மகேஷ்பாபுவுடன் கைக்கோர்க்கும் அவர்,இந்தப் படத்தை த்ரில்லர் படமாக எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்பதே தன்னுடைய வாழ்நாள் கனவு என்றும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Director of RRR movie Rajamouli gets best director award from The newyork film critics circle
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X