Rajamouli: :கல்கி 2898 AD படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல இயக்குநர்.. அதிகரிக்கும் மாஸ்!

சென்னை: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கல்கி 2898 AD. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மே 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசன் பிரபாசுக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக அவர் சில தினங்களே கால்ஷீட் கொடுத்த நிலையிலும் 150 கோடி ரூபாய் வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

முன்னதாக பொங்கல் பண்டிகையையொட்டி கல்கி 2898 AD படம் திரையரங்குகளில் ரிலீசாகவிருந்த நிலையில், படத்தின் சூட்டிங் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. முன்னதாக இந்தப் படத்திற்கு பிராஜெக்ட் கே என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கல்கி 2898 AD என்று பெயரிடப்பட்டது. பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகிவரும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Director Rajamouli going to join iKalki 2898 AD movie in cameo role it seems

கல்கி 2898 AD: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 AD, இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பிரபாசுக்கு வில்லனாகியுள்ளார். இந்தப் படத்திற்காக அவர் சில தினங்களே கால்ஷீட் கொடுத்த நிலையில் அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தின்மூலம் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக களமிறங்கியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க இந்தக் காரணமும் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் முன்னதாக நடிகையர் திலகம் என்ற நடிகை சாவித்ரியின் பயோ-பிக்கை இயக்கியுள்ள நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

சயின்ஸ் பிக்ஷன் படம்: சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள இந்தப் படத்தினை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. தங்களது 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் இந்தப் படம் இணைந்துள்ளதாகவும் தயாரிப்புத் தரப்பு முன்னதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. படம் மே மாதம் 9ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பிரம்மாண்டமான அளவில் தயாரிப்பு தரப்பு வெளியிட்டிருந்தது.

கேமியோ ரோலில் ராஜமௌலி?: நடிகர் கமல்ஹாசனும் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார். 6000 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்ற ஒரு கதை மீண்டும் மே மாதம் 9ம் தேதி துவங்கவுள்ளதாக அவர் இந்த அறிவிப்பில் கூறியிருந்தது ரசிகர்களை அதிகமாக உற்சாகப்படுத்தியிருந்தது. படத்தில் இந்திய அளவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இடம்பெற்றுள்ள நிலையில் படத்திற்கு மேலும் அட்ராக்ஷனை கூட்டும்வகையில் பிரபல இயக்குநர் ராஜமௌலியும் இந்தப் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இதேபோல நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் இந்திய அளவில் சிறப்பான பல நடிகர்கள், நடிகைகள் இணைந்துள்ள இந்தப் படம் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. படம் வெளியாகும்போது, ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலங்களில் வரலாற்று பின்னணியில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வரும் சூழலில் இந்தப் படம் 6000 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்ற கதைக்களத்தை மீண்டும் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X