twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைகனம் இல்லாதவர்... அதனால்தான் 'தல'யை நீக்க சொல்லியிருக்காரு... ராஜமௌலி பாராட்டு

    |

    சென்னை : டைரக்டர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இன்றைய தினம் விஜய் டிவிக்காக ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் பிரத்யேக பேட்டியளித்துள்ளனர்.

    அந்தப் பேட்டியில் ராஜமௌலி நடிகர் அஜித் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

    தாமரையை நோக்கி துப்பினது தப்புதான்.. விதிமீறல் நடந்திருக்கு.. கட்டிபுடி டிராமா கமல் கிட்ட பலிக்காது!தாமரையை நோக்கி துப்பினது தப்புதான்.. விதிமீறல் நடந்திருக்கு.. கட்டிபுடி டிராமா கமல் கிட்ட பலிக்காது!

    இயக்குநர் ராஜமௌலி

    இயக்குநர் ராஜமௌலி

    இயக்குநர் ராஜமௌலி டைரக்டர் செய்து வரும் ஜனவரி 7ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் ஆர்ஆர்ஆர். கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்டவற்றின் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரலுக்கு தள்ளிப் போகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    சிறப்பான ப்ரமோஷன்

    சிறப்பான ப்ரமோஷன்

    ஆயினும் படத்தின் பிரமோஷன் பணிகளில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் விஜய் டிவிக்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் பிரத்யேக் பேட்டியளித்துள்ளனர். இந்தப் பேட்டியை டிடி எடுத்துள்ளார். இதன்போது பல்வேறு விஷயங்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

    படம் குறித்து ராஜமௌலி

    படம் குறித்து ராஜமௌலி

    இந்தப் பேட்டியின்போது படம் குறித்த பல்வேறு விஷயங்களை ராஜமௌலி பகிர்ந்து கொண்டார். பல ரிஸ்கான காட்சிகளில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் அதிக சிரத்தையுடன் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ராஜமௌலி ஹீரோக்களால் முடியும்

    ராஜமௌலி ஹீரோக்களால் முடியும்

    இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு இடையில் பதிலளித்த ஜூனியர் என்டிஆர், ராஜமௌலி ஹீரோக்களால் அது முடியும் என்று கூறினார். தொடர்ந்து அஜித் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜமௌலி, கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அஜித்துடன் இனிய சந்திப்பு

    அஜித்துடன் இனிய சந்திப்பு

    மேலும் அவருடனான இனிய சந்திப்பு குறித்தும் பகிர்ந்து கொண்டார். தனது மனைவியுடன் தான் ரெஸ்டாரெண்டிற்கு சென்றபோது அங்கு வந்த அஜித், தன்னுடைய மனைவி குறித்து கேட்டறிந்து, பின்பு தானாக அவரிடம் சென்று தன்னை அஜித் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதையும் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.

    மறக்க முடியாத சம்பவம்

    மறக்க முடியாத சம்பவம்

    இந்த சம்பவத்தை தன்னால் எப்போதுமே மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தல என்பதை நீக்க சொன்தையும் தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். சரியான ஸ்கிரிப்ட் அமைந்தால் ரஜினியுடன் படம் பண்ண விருப்பம் உள்ளதாக சமீபத்தில் ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

    அஜித் -ராஜமௌலி கூட்டணி?

    அஜித் -ராஜமௌலி கூட்டணி?

    அஜித் குறித்து பல விஷங்களை பகிர்ந்துள்ள ராஜமௌலி, அவரின் குணம் குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ராஜமௌலி மற்றும் அஜித் கூட்டணி விரைவில் ஏற்பட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English summary
    Director Rajamouli hails Actor Ajith on his gesture
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X