twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் நாவலை படித்த பாகுபலி இயக்குநர்..கதை, கேரக்டர்கள் குறித்து பாராட்டு!

    |

    ஐதராபாத் : பொன்னியின் செல்வன் படம் சர்வதேச அளவில் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.

    இந்தப் படத்திற்கு மிகச்சிறந்த பாராட்டுக்களையும் மதிப்பெண்களையும் விமர்சகர்கள் கொடுத்துள்ளனர்.

    பொன்னியின் செல்வன் படம் இந்தியாவின் வரலாற்றையும் பெருமையையும் உலகம் அறிய செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    தளபதி 67க்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்த சிம்பு பட இயக்குநர்… எல்லாம் விஜய்க்காக மட்டும் தானாம்!தளபதி 67க்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்த சிம்பு பட இயக்குநர்… எல்லாம் விஜய்க்காக மட்டும் தானாம்!

    பொன்னியின் செல்வன் படம்

    பொன்னியின் செல்வன் படம்

    நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களின் அடையாளங்களை மாற்றி அவர்களை அருண்மொழி, வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், குந்தவை, நந்தினி என பொன்னியின் செல்வன் மூலம் உலவ விட்டுள்ளார் மணிரத்னம். இவரது கனவுத் திரைப்படத்தை உலக அளவில் தற்போது வெற்றிப் பெற செய்துள்ளார்.

    150 நாட்களில் சூட்டிங்

    150 நாட்களில் சூட்டிங்

    இந்தப் படம் சர்வதேச அளவில் பிரம்மாண்டமாக வெளியான நிலையில், ரசிகர்கள், விமர்சகர்கள், பிரபலங்கள் அனைவரும் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. இதை வெறுமனே 150 நாட்களில் சாத்தியப்படுத்தியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் 150 நாட்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

    9 மாதங்களில் 2வது பாகம் ரிலீஸ்

    9 மாதங்களில் 2வது பாகம் ரிலீஸ்

    இந்தப் படத்தின் முதல்பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக இரண்டாவது பாகத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்த நிலையில் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகளையும் நிறைவு செய்து இன்னும் 9 மாதங்களில் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீஸ் செய்யவுள்ளார் மணிரத்னம்.

    5 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பாகுபலி

    5 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பாகுபலி

    இந்தப் படத்தை ராஜமௌலியின் பாகுபலி படங்களுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த சூட்டிங்கும் 150 நாட்களில் நிறைவடைந்ததை கேள்விப்பட்ட இயக்குநர் ராஜமௌலி, பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களை எடுத்து முடிக்க தனக்கு 5 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்துள்ளார்.

    பயந்துபோன ராஜமௌலி

    பயந்துபோன ராஜமௌலி

    இதுகுறித்து பகிர்ந்த ஜெயம்ரவி, தான் இதுகுறித்து ராஜமௌலியிடம் கூறியபொழுது, இதுபோன்ற தகவல்களை கூறி தன்னை பயமுறுத்தாதே என்று அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பொன்னியின் செல்வன் குறித்த வரலாறை அறியும் பொருட்டு அந்தக் கதையை தான் படித்ததாகவும் கதையும் கேரக்டர்களும் தன்னை மிகவும் வியப்பிற்குள்ளாக்கியதாகவும் இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

    70 ஆண்டுகால முயற்சி

    70 ஆண்டுகால முயற்சி

    கடந்த 70 ஆண்டுகாலங்களாக பொன்னியின் செல்வன் நாவலை எடுக்க பல்வேறு முயற்சிகளை தமிழக சினிமா எடுத்து வந்தது, எம்ஜிஆர், கமல் உள்ளிட்டவர்களின் முயற்சி பலிக்காத நிலையில், தன்னுடைய மூன்றாவது முயற்சியில் இதை சாத்தியப்படுத்தியுள்ளார் மணிரத்னம். சர்வதேச அளவில் அதிகமான பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

    English summary
    Director Rajamouli hails Kalki's Ponniyin selvan novel story and its characters
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X