twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தந்தையின் ‘1770’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய மறுத்த ராஜமெளலி: இதுக்காக தான் இந்த அதிரடி முடிவா?:

    |

    ஐதராபாத்: தெலுங்கு சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் ராஜமெளலி.

    Recommended Video

    Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

    ராஜமெளலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது.

    ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியராக பார்க்கப்படுகிறார்.

    “இந்தியன் 2“ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது..ரெடியாகிறார் காஜல் அகர்வால்!“இந்தியன் 2“ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது..ரெடியாகிறார் காஜல் அகர்வால்!

    ராஜமெளலியின் பெரும் பலம்

    ராஜமெளலியின் பெரும் பலம்

    இந்திய சினிமாவில் இயக்குநர் ராஜமெளலியின் பெயர் தவிர்க்கவே முடியாத உயரத்தில் உள்ளது. 2001ல் ஸ்டூடண்ட் நம்பர் 1 படம் மூலம் அறிமுகமானவர், இன்று தெலுங்கு சினிமாவின் நம்பர் 1 இயக்குநராக கலக்கி வருகிறார். ஸ்டூடண்ட் நம்பர் 1 முதல் ராஜமெளலி கடைசியாக இயக்கியிருந்த 'ஆர்.ஆர்.ஆர்' படம் வரை, அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் தான். அவரது திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற பலமாக இருப்பது, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தின் திரைக்கதை தான்.

    இந்தியாவின் மிகச் சிறந்த கதாசிரியர்

    இந்தியாவின் மிகச் சிறந்த கதாசிரியர்

    ராஜமெளியின் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களின் வெற்றிக்கு பின்னால், அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தின் எழுத்தும் முக்கியமான காரணமாக இருந்தது. தெலுங்கு மட்டும் இல்லாமல், தமிழ், இந்தி படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார் விஜயேந்திர பிரசாத். குறிப்பாக இவரது எழுத்தில் இந்தியில் சல்மான் கான் நடித்து, 2015ம் ஆண்டு வெளியான 'பஜ்ராங்கி பைஜான்' திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் மக்களின் மத நல்லிணக்கத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது.

    திரைப்படமாகும் ஆனந்த மடம் நாவல்

    திரைப்படமாகும் ஆனந்த மடம் நாவல்

    இந்நிலையில்,.ராஜமெளலியிடம் உதவியாளராக பணியாற்றிய அஷ்வின் கங்கராஜு. வங்க எழுத்தாளர் பக்கிம் சந்திரசட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' நாவலைத் தழுவி '1770' என்ற படத்தை இயக்குகிறார். இந்த ஆண்டு, 'வந்தே மாதரம்' பாடல் பிறந்து 150 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் பாடல், 'ஆனந்த மடம்' நாவலில்தான் முதன்முதலாக இடம் பெற்றது. அதைக் குறிக்கும் வகையில் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

    விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் 1770

    விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் 1770

    இந்தப் படம் பற்றி இயக்குநர் அஸ்வின் கங்கராஜு கூறும்போது, '1770 எனக்கு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், விஜயேந்திர பிரசாத் கதை, திரைக்கதையை எளிமைப்படுத்தியதால், இது மாபெரும் வெற்றிபெரும் என நம்புவதாக கூறியிருந்தார். இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் உருவாகிறது. வரும் தீபாவளி அன்று படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட உள்ளன.

    மறுப்புத் தெரிவித்த ராஜமெளலி

    மறுப்புத் தெரிவித்த ராஜமெளலி

    1770 திரைப்படம் வலதுசாரி சித்தாந்தத்தின் பின்னணியில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தில் விடுதலைப் போரில் இந்து சன்னியாசிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டதாக காட்சிகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜயேந்திர பிரசாத் தற்போது ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்து வருகிறார். இதனால், 1770 படத்தை ப்ரோமோஷன் செய்யக்கோரி தன்னிடம் வரக்கூடாது என, தந்தை விஜயேந்திர பிரசாத்துக்கு ராஜமெளலி மறுப்புத் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Director Rajamouli has said that he will not promote the film 1770
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X