அமெரிக்கர்களுக்கு வெற்றிமாறன் படம் பரிந்துரை.. ராஜமௌலி செய்த சம்பவம்
சென்னை: இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அமெரிக்கர்களுக்கு பரிந்துரைத்த ஐந்து படங்களில் வெற்றிமாறனின் ஆடுகளத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஈ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜமௌலி பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குநர் ஆனார். மேலும் பிரமாண்ட இயக்குநர் என்றால் ஷங்கர் என்ற பெயரையும் ராஜமௌலில் தற்போது தன்னிடம் வைத்திருக்கிறார்.

1000 கோடி ரூபாய் வசூலித்த ஆர்.ஆர்.ஆர்
ராஜமௌலி கடைசியாக ஜூனியர் என் டிஆர், ராம்சரண் உள்ளிட்டோரை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இவர்களுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருந்தது. சுதந்திர போராட்ட காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ராஜமௌலி மேலும் பிரபலமடைந்த இயக்குநராக அறியப்படுகிறார்.

ராஜமௌலி பரிந்துரை செய்த படங்கள்
இந்நிலையில் இயக்குநர் ராஜமௌலி தி நியூயார்க் இதழுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் தொகுப்பாளர், அமெரிக்கர்கள் பார்க்க வேண்டிய இந்திய திரைப்படங்களை பரிந்துரையுங்கள் என்ற கேட்டார். அதற்கு பதிலளித்த ராஜமௌலி, சங்கராபரணம், முன்னா பாய் எம்.பி.பி.எஸ், பண்டித் குயீன், ப்ளாக் ப்ரைடே, வெற்றிமாறனின் ஆடுகள் என்றார்.
வெற்றிமாறனின் படத்தை அமெரிக்காவில் ராஜமௌலி பரிந்துரை செய்ததை அடுத்து வெற்றிமாறன் எவ்வளவு முக்கியமான இயக்குநர் என்று தெரிகிறது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

ஆடுகளத்தில் அடித்து ஆடிய வெற்றிமாறன்
ஆடுகளம் திரைப்படம் வெற்றிமாறனின் இரண்டாவது படமாகும். இதில் தனுஷ், கிஷோர், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சேவல் சண்டையையும், அதை சுற்றி மனிதர்களிடம் எழும் ஈகோ பிரச்னையையும் மையப்படுத்தி படம் உருவாகியிருக்கும். மெகா ஹிட்டான இந்தப் படம் 5க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் ரேஸில் ஆர்.ஆர்.ஆர்
ராஜமௌலி இயக்கியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றிருக்கும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் நாமினேஷனில் இருக்கிறது. முன்னதாக அந்தப் பாடலுக்கு இசையமைத்த மரகதமணியும், பாடலாசிரியர் போஸும் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை பெற்றனர் என்பது நினைவுகூரத்தக்கது. எனவே ஆஸ்காரையும் அந்தப் பாடல் பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











