500 கோடியுடன் ஆப்ரிக்க காட்டுக்கு போகும் ராஜமௌலி... யார கூட்டிக்கிட்டு போறாருன்னு பாருங்க!
ஐதராபாத் : இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் மிரட்டலான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. படம் அனைத்து சென்டர்களிலும் மக்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. படத்தின் வசூலும் சிறப்பான வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Recommended Video

ஆர்ஆர்ஆர் படம்
நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது ஆர்ஆர்ஆர் படம். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த ஆர்ஆர்ஆர்
ராஜமௌலியின் பாகுபலி படங்கள் ரசிகர்கள் விருப்பத்திற்குரியவைகளாக உள்ள நிலையில், சுதந்திர போராட்டக் காலத்தை கண்முன்னே கொண்டுவந்துள்ள ஆர்ஆர்ஆர் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் ரிலீசுக்கு முன்னதாகவே வசூல்ரீதியாக சாதனை புரிந்திருந்தது.

ரசிகர்கள் பாராட்டு
இந்நிலையில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு என இந்திய அளவில் 5 மொழிகளில் படம் ரிலீசாகி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக அமைந்துள்ளது. படத்தின் பிரம்மாண்டம் குறித்து ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மகேஷ்பாபுவை இயக்கும் ராஜமௌலி
இந்நிலையில் ராஜமௌலியின் அடுத்தப்படம் குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர் அடுத்ததாக மகேஷ்பாபுவுடன் இணைந்து படமியக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராஜமௌலி மகேஷ்பாபுவுடன் இணைந்து வெளியாகியுள்ள புகைப்படம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டமான படம்
இந்தப் படம் காடுகளை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாகவும் வழக்கம்போல மிகவும் பிரம்மாண்டமான வகையில் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெற்கென ஆப்ரிக்க காடுகளில் சென்று சூட்டிங்கை ராஜமௌலி எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
தற்போது இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ராஜமௌலி துவங்கவுள்ளதாகவும் இந்த ஆண்டின் இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே மகேஷ்பாபுவும் அடுத்தடுத்த இரண்டு படங்களில் பிசியாக உள்ளார். வரும் மே 12ம் தேதி அவரது சர்க்காரு வாரி பட்டா படம் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











