மகேஷ் பாபுவின் பாஸ்போர்ட் ராஜமௌலியின் கைகளில்.. ட்ரெண்டாகும் செம வீடியோ
ஹைதராபாத்: இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்திருப்பவர் ராஜமௌலி. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதையும் அந்தப் படத்துக்கு இசையமைத்த கீரவாணி பெற்றார். அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி படத்தை இயக்குகிறார். அந்தப் படத்தின் பணிகள் ஆரம்பித்திருக்கும் சூழலில் அவர் போட்டிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்தியாவில் ஃபேமஸான இயக்குநர்களில் ஒருவர் ராஜமௌலி. தெலுங்கு திரையுலகின் மார்க்கெட்டை பான் இந்தியா அளவில் உயர்த்தியது என்றால் இவரது படங்கள்தான். அதற்கு பிறகுதான் புஷ்பா போன்ற படங்கள் எல்லாம் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தன. இதன் காரணமாக டோலிவுட்டின் மதிப்புவாய்ந்த இயக்குநர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். எப்படியாவது அவருடைய படத்தில் நடித்துவிட வேண்டும். அப்படி நடித்துவிட்டால் தங்களது கரியர் உச்சம் செல்லும் என்று ஏங்கும் நடிகர்கள் ஏராளம்.

பாகுபலி 1,2: ராஜமௌலிக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது என்றால் அது நான் ஈ படம்தான். ஈயை வைத்துக்கொண்டு அந்தப் படத்தில் விளையாடியிருப்பார் அவர். அதற்கு அடுத்ததாக அவரை இந்திய அளவில் தெரியவைத்த படங்கள் என்றால் பாகுபலி படத்தின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும். அந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. பிரபாஸுக்கும் பான் இந்தியா ஹீரோ என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது அந்தப் படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஆர்ஆர்: இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ராஜமௌலியின் மார்க்கெட்டும், மதிப்பும் உயர்ந்துவிட்டது. சூழல் இப்படி இருக்க அவர் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் விமர்சன ரீதியாக கொஞ்சம் டல்லடித்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. முக்கியமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்த அந்தப் படம் ஆஸ்கர் ரேஸுக்கும் சென்றது. படத்துக்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை கீரவாணி பெற்றார்.
அடுத்த படம்: ஆர்ஆர்ஆர் படம் மௌலியின் மார்க்கெட்டை மேற்கொண்டு உச்சம் கொண்டு சென்றிருக்கிறது. அடுத்ததாக அவர் யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த சூழலில் அவர் மகேஷ் பாபுவை வைத்து இயக்குகிறார். அநேகமாக இந்தப் படம் மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து உருவாகலாம் என்று டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று மகேஷின் ரசிகர்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் இருவரும் இணையும் படத்தின் பணிகள் தொடங்கியிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க ராஜமௌலி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் சிங்கத்தை பார்த்தபடி நிற்க சிறிது நேரத்தில் கையில் பாஸ்போர்ட்டுடன் காட்சியளிக்கிறார். அதாவது மகேஷ் பாபுவின் கால்ஷீட் எல்லாம் வாங்கியாச்சு என்பதை மறைமுகமாக சொல்கிறார். அந்த வீடியோவுக்கு கீழே மகேஷ் பாபுவும், பிரியங்கா சோப்ராவும் கமெண்ட் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











