இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஜீவ் மேனன்.. பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை : இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சில கலைஞர்கள் குறைவான திரைப்படங்கள் கொடுத்திருந்தாலும் அவர்களின் தனித்துவம் பலரின் கண்களில் பட்டு மின்னிக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ராஜீவ் மேனன், ஆரம்ப காலங்களில் ஆவணப்படங்கள் எடுத்து பின் ஒளிப்பதிவாளராக திரையில் கால் வைத்தார். தமிழ் மட்டுமின்றிதெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் அறியப்படும் கலைஞன் ராஜீவ் மேனன்.

1990 களில் தோன்றிய ஒரு இசை புரட்சி ஏ.ஆர்.ரகுமான் அவருடனான கூட்டணிதான் ராஜீவ் மேனனின் தனித்துவத்திற்கு ஓர் அங்கம் என்றே சொல்லலாம். நிச்சயமாக அவரின் மின்சார கனவு திரைப்படம் வெளியான நேரத்தில் "வெண்ணிவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா" பாடல் பாடாத நபர்கள் இல்லை. தனக்கென்று தனி ஸ்டைல் காதலை இசையின் மூலம் இன்னும் அழுத்தமாக சொல்லலாம் என்ற எண்ணம் இவையனைத்தும் தான் அவரை தனித்துவமாக காண்பிக்க உதவுகிறது.
அவரின் அடுத்த படைப்பான "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"
ஒரு வித்தியாசமான படைப்பு என்றே சொல்லலாம் மெல்லிய திரைக்கதை அழகான பாடல்கள் என பல அந்த திரைப்படம் நன்றாக அமைய உதவியது. "இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்"என அஜீத் கேட்ட குரல் இன்னும் காதில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இளைஞர்கள் பலர் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு தந்தார்கள். ஆனால் ராஜீவ் மேனன் அதோடு தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு வேறெந்த படைப்புகளும் தரவில்லை.

அடுத்ததாக 2018ல் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் "சர்வம் தாளமயம்" வெளியானது. ஜி.வி.பிரகாஷ் அதுவரை நடித்த திரைப்படங்களில் அனைவரையும் கவர்ந்தது என்றால் அது இந்த திரைப்படம் தான். முழுக்க முழுக்க இசை பற்றிய இந்த படம் வழக்கம் போல் ரகுமானின் கூட்டணியோடுதான் நடந்தது. அனைத்து பாடல்களும் காட்சிகளும் வழக்கமான அவரின் ஸ்டைலை ரசிக்க தவறவில்லை. ஒரு நல்ல திரைப்படமாக அவருக்கு அமைந்தது.

இயக்குனராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். அதில் 1995ல் தமிழில் வெளியான பாம்பே திரைப்படம் குறிப்பிடத்தக்கது. பல விருதுகளும் இவர் வாங்கியுள்ளார். சில படைப்புகளே கொடுத்தாலும் இன்றும் ராஜீவ் மேனன் என்றால் அவரின் அழகான காட்சிகள் மனதில் தங்கும் என்பதே உண்மை. அவரின் பிறந்தநாளான இன்று வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.


Click it and Unblock the Notifications











