இணை இயக்குநரை மணந்த ‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!
ரங்கூன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி திருமணம் சென்னையில் நடைபெற்றது
சென்னை: ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - ஜஸ்வினி திருமணம் சென்னையில் நடைபெற்றது.
கெளதம் கார்த்திக், சனா மக்புல் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான படம் 'ரங்கூன்'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. முன்னதாக இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

இவருக்கும், இணை இயக்குநரான ஜஸ்வினிக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிம்பு, திவ்யதர்ஷினி,ரியோ உள்ளிட்ட வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பலர் கலந்து கொண்டனர்.

ஜஸ்வினி ரங்கூன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications