அமரன் முன்னாடியே ரிலீசாகியிருந்தா.. ராஜ்குமார் பெரியசாமியிடம் விஜய் சொன்ன விஷயம்.. மிஸ்ஸாயிடுச்சே!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் லைன்-அப்பில் உள்ளன. கடந்த மாத இறுதியில் தீபாவளி கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியான நிலையில் இந்த படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. படத்தின் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அமரன் படம் திரையரங்குகளில் ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு வெற்றிகரமாக ஓடியுள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக படத்தைப் பார்த்த நடிகர் விஜய் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

vijay sivakarthikeyan rajkumar periasamy
அமரன் படம்: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் கடந்த சில வருடங்களாக அவர் இந்த படத்தின் கதைகளத்திற்காக மெனக்கெட்டதை தன்னுடைய பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷின் இசையும் மிகப்பெரிய பலத்தை கொடுத்திருந்தது.

பயோ-பிக் படம்: அமரன் படத்தை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டிவரும் நிலையில் படம் கடந்த ஒரு மாத காலத்தில் மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை கூறும்வகையில் அமைந்துள்ளது. படத்தில் முகுந்த் வரதராஜன் மற்றும் அவரது மனைவி இந்துவாக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சாய்பல்லவி இந்துவாகவே தோற்றமளிப்பதாக முகுந்த் வரதராஜனின் பெற்றோர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

அமரன் படக்குழுவினரை பாராட்டிய விஜய்: சிவகார்த்திகேயனின் பல காட்சிகளில் தங்களது மகனை பிரதிபலித்ததாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இந்த படத்திற்காக பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை படக்குழுவினர் பெற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் அகாடமி சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக படத்தை பார்த்த நடிகர் விஜய், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து படக்குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அமரன் முன்னதாகவே வெளியாகியிருந்தால்?: அப்போது இயக்குநரின் அமரன் படத்தை பாராட்டிய நடிகர் விஜய், படம் முன்னதாகவே வெளியாகியிருந்தால் தற்போது நிலைமையே மாறியிருக்கும் என்று கூறியதாக ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய பேட்டியில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது தன்னுடைய இறுதி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார் விஜய். அமரன் படம் முன்னதாகவே ரிலீசாகியிருந்தால் ராஜ்குமார் பெரியசாமியுடன் விஜய் இணைய வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறியதாக ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். முன்னதாகவே ராணுவ வீரராக துப்பாக்கி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் விஜய். இந்நிலையில் அமரன் போன்றதொரு கதைக்களத்தில் விஜய்யை பார்ப்பதும் சிறப்பாகவே இருந்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X