Amaran: கண்களை கலங்க வைத்த அமரன்.. ராஜ்குமார் பெரியசாமி பெற்ற சம்பளம் எவ்ளோ தெரியுமா!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் கடந்த மாதம் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. கடந்த ஆறு நாட்களில் இந்த படத்தின் வசூல் 163 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். உணர்வுபூர்வமான காட்சிகளையும் திரைக்கதையையும் இந்த படத்தில் இணைத்துள்ள ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் படம் கடந்த 31ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சிறப்பான வசூலை பெற்று வருகிறது. கடந்த ஆறு நாட்களில் படத்தின் வசூல் 163 கோடி ரூபாய்களை சர்வதேச பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து வார நாட்களிலும் அரங்கு கொள்ளாத காட்சிகளாக இந்த படம் சிறப்பாக ஓடி வருகிறது. இதையடுத்து படத்தின் வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி: இதனிடையே இந்த படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, படத்தின் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருக்கு இந்த படத்திற்காக மிகச் சிறப்பான வரவேற்பும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. படத்தில் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபெக்கா வர்கீஸ் என நிஜ கேரக்டர்களை பிரிதிபலிக்கும்வகையில் படத்தை ராஜ்குமார் பெரியசாமி எடுத்து முடித்துள்ளார். இந்த கேரக்டர்களுக்கு நிஜமான வடிவம் கொடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளனர். அழகான காதலையும் இந்த படத்தில் இழையோட விட்டுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.
மேஜர் முகுந்தின் பயோ-பிக்: ஒரு ராணுவ வீரரின் மறைவை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். தினந்தோறும் புல்வாமா தாக்குதல்கள் உள்ளிட்டவற்றை நாம் இயல்பாக கடந்து சென்றாலும் முகுந்த் வரதராஜனின் மறைவை அப்படி சாதாரணமாக கடக்க முடியவில்லை. மாறாக அவர் மீது ஆழமான அன்பை வைத்துள்ள மனைவியின் நேசம் தான் அங்கு கண்முன்னே வந்து நிற்கிறது. ராணுவ வீரர்களின் அடுத்தடுத்த அதிரடிகளையும் அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சிறப்பாக இந்த படம் காட்சிப்படுத்தியுள்ளது. முன்னதாக இது போன்ற அதிகமான படங்கள் வந்துள்ள போதிலும் இந்த படத்தில் முகுந்த் மற்றும் இந்துவின் காதல், முகுந்தின் மறைவு மற்றும் அதை இந்து எதிர்கொள்ளும்விதம் ரசிகர்களை என்னவோ செய்கிறது.
தனுஷுடன் இணையும் ராஜ்குமார் பெரியசாமி?: அந்த வகையில் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக யோசித்து இணைத்துள்ள ராஜ்குமார் பெரியசாமி, மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறார். அவரது அடுத்த படம் குறித்த தகவல்களும் அடுத்தடுத்து வந்தவண்ணம் உள்ளன. அடுத்ததாக நடிகர் தனுஷுடன் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ள ராஜ்குமார் பெரியசாமி, ஆனால் தனுஷை குறிப்பிடாமல் பவர்ஃபுல் நடிகர் என்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்குமார் பெரியசாமியின் சம்பளம்: இதனிடையே அமரன் படத்தில் ராஜ்குமார் பெரியசாமியின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அவர் இந்த படத்திற்காக 6 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் உருவாகியுள்ள இந்த படம் முதல் இரண்டு நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ள நிலையில் ராஜ்குமார் பெரியசாமியின் சம்பளமும் அதிரடியாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











