அமரன் பெயருக்கு பின்னால் இருக்கும் காரணம்.. இயக்குநர் சொன்ன உருக்கமான பதில்!

சென்னை: சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அமரன் என்கிற பெயரில் படமாக இயக்கி உள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

இப்படத்தில் மேஜர் முகுந்தாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரின் மனைவி இந்து ரெபகா வர்கீஸாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி. படம் இன்று காலை வெளியான நிலையில், பபடம் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில், இதுவரை எந்த படத்திலும் இல்லாத சிவகார்த்திகேயன் இந்த படத்தில் பார்க்கலாம். சாய் பல்லவிக்கு இந்தபடம் நிறைய விருதுகள் பெற்றுத்தரும், . ஜி.வி. பிரகாஷ் குமாரின் பிஜிஎம் வேற லெவல் என கூறிவருகின்றனர்.

amaran sivakarthikeyan rajkumar periyasamy

என்னை மிகவும் பாதித்தது: இந்நிலையில் படம் குறித்து ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டு இருப்பதால், இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை, முகுந்த் வரதராஜன் இறந்த செய்தி கேட்டதும் நான் முதல் முதலில் பார்த்த வீடியோ அவர் அவருடைய மகளுடன் இருப்பதைத்தான். அந்த வீடியோ என்னை மிகவும் பாதித்தது. அதனால் தான் அந்த வீடியோவை டிரைலரின் முதலில் இணைத்திருக்கிறேன். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கும் போது அவருடைய கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்ற கேள்விக்கு எல்லோருடைய பதில் சிவகார்த்திகேயன் என்று தான் இருந்தது.

காரணம் இதுதான்: படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததும் அதை ராணுவ அதிகாரிகளுக்கு நாங்கள் அனுப்பினோம். மேலும் படத்தை எடுத்து முடித்ததும் அதையும் ராணுவ அதிகாரிகளுக்கு போட்டுக் காட்டினோம் ஏன் என்றால் இதில் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இந்த படத்திற்கு அமரன் என்று பெயர் வைக்க முக்கிய காரணம் இருக்கிறது. அமரன் என்றால் மரணம் இல்லாதவன் என அர்த்தம். டெல்லியில் அமர் ஜவான் ஜோதி என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில், இறந்த ராணுவ வீரர்களுக்கு தினமும் விளக்கு ஏற்றி வைக்கப்படும். அமர்ஜவான் என்றால் இறந்த ராணுவ வீரர்கள் என்று அர்த்தம். இந்த படத்திற்கும் அமரன் என்ற டைட்டில் தான் சரியாக இருக்கும் என்பதால் தான் படத்திற்கு அமரன் என பெயர் வைத்து இருக்கிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X