கார்த்தியோட அடுத்தப்படம்.. யார் இயக்கப்போறாரு தெரியுமா.. மேடையில் உறுதிப்படுத்திய இயக்குநர்!

சென்னை : நடிகர் கார்த்தியின் விருமன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதற்கான ப்ரமோஷன்களில் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் படத்தில் பிரபல இயக்குநர் ராஜு முருகன் 3 பாடல்களை எழுதியுள்ளார். அவரும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார்.

விருமன் படம்

விருமன் படம்

நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் விருமன். முத்தையா -கார்த்தி கூட்டணி இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இவர்கள் இணைந்த முதல் படம் கொம்பன் சிறப்பான வெற்றியை பெற்றது.

சூர்யா தயாரிப்பு

சூர்யா தயாரிப்பு

இதனிடையே கொம்பன் படம் தற்போது சிறப்பான வகையில் உருவாகியுள்ளது. படத்தில் ராஜ்கிரண் உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு மலேசியாவிலும் இவர்கள் பிரமோஷன்களில் ஈடுபட்டனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கார்த்தியை இயக்கும் ராஜு முருகன்

கார்த்தியை இயக்கும் ராஜு முருகன்

இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பாக பிரபல இயக்குநர் ராஜு முருகன் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது கார்த்தியின் அடுத்தப்படத்தை தான் இயக்கவுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். கார்த்தியுடன் பணியாற்றுவது எப்போதுமே சிறப்பானது என்றும் புல் சார்ஜ் போட்ட பேட்டரி போல உற்சாகமாகவே அவர் காணப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனங்களின் கதை

ஜனங்களின் கதை

அவருடன் பணியாற்றுவதன்மூலம் தான் அதிகமான விஷயங்களை கற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விருமன் படம் ஜனங்களின் கதையாக உருவாகியுள்ளதாகவும் தான் சந்திக்கும் எளிமையான மனிதர்களின் உணர்வுகளை சொல்லி முத்தையா படம் இயக்கி வருவதாகவும் ராஜு முருகன் பாராட்டு தெரிவித்தார்.

ஜனங்களின் கதை

அவருடன் பணியாற்றுவதன்மூலம் தான் அதிகமான விஷயங்களை கற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விருமன் படம் ஜனங்களின் கதையாக உருவாகியுள்ளதாகவும் தான் சந்திக்கும் எளிமையான மனிதர்களின் உணர்வுகளை சொல்லி முத்தையா படம் இயக்கி வருவதாகவும் ராஜு முருகன் பாராட்டு தெரிவித்தார்.

Recommended Video

Soori Ultimate Comedy Speech | என்ன கொன்னுருப்பானுங்க ! Viruman Press Meet *Kollywood
3 பாடல்களை எழுதிய ராஜு முருகன்

3 பாடல்களை எழுதிய ராஜு முருகன்

மேலும் கார்த்தியிடம் கதை சொல்ல சென்றபோது, இந்தப் படத்தில் பாட்டு எழுதும் வேலையை தன்னிடம் அவர் கொடுத்ததாகவும் தொடர்ந்து இந்தப் படத்தில் 3 பாடல்களை எழுதிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய பாடல் வரிகளை இளையராஜா சார் பாடியது தன்னுடைய கனவு நனவான தருணம் என்றும் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X