'கர்ணன்' நமக்கான படம்.. இந்த மண்ணின் கதை.. எம் மக்களின் வதை.. பிரபல இயக்குநர் புகழாரம்!
சென்னை: கர்ணன் திரைப்படம் குறித்து பிரபல இயக்குநரான ராஜு முருகன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கர்ணன். கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிசிலும் வசூலைக் குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்கள் பலரும் கர்ணன் படத்தை பாராட்டி வருகின்றனர்.

பாஸிட்டிவ் விமர்சனங்கள்
விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி என பிரபலங்கள் பலரும் கர்ணன் படத்தை கொண்டாடி வருகின்றனர். விமர்சனங்களும் கர்ணன் படத்திற்கு ஆதரவாகவே குவிந்து வருகிறது. திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
Recommended Video

அமெரிக்காவில் வரவேற்பு
இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. கர்ணன் திரைப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அமெரிக்காவிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் தானு தெரிவித்திருந்தார்.
நமக்கான படம்
இந்நிலையில் கர்ணன் படத்தை பாராட்டி பிரபல இயக்குநரான ராஜூ முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது, 'கர்ணன்' நமக்கான படம். இந்த மண்ணின் கதை... எம் மக்களின் வதை. அதை தரமான, அறமான சினிமாவாக்கியிருக்கும் தோழன் மாரி செல்வராஜுக்கு இன்னொருமுறை இதயத்தின் முத்தங்கள் என பதிவிட்டுள்ளார்.
வியப்பை தந்து கொண்டேயிருக்கும் dhanushkraja நல்ல படைப்பாளிகளை கொண்டாடும் theVcreations உயிர்ப்பான இசையையும் ஒளியையும் தந்திருக்கும் நண்பர்கள் Music_Santhosh, #TheniEeshwar உள்ளிட்ட படக்குழுவினர்க்கு வாழ்த்துகள்! pic.twitter.com/DYjHguDHD5
— Director Rajumurugan (Dir_Rajumurugan) April 13, 2021
வாழ்த்து
தனது மற்றொரு பதிவில் வியப்பை தந்து கொண்டேயிருக்கும் தனுஷ் நல்ல படைப்பாளிகளை கொண்டாடும் வி கிரியேஷன்ஸ் உயிர்ப்பான இசையையும் ஒளியையும் தந்திருக்கும் நண்பர்கள்


Click it and Unblock the Notifications











