தளபதி 66ன் அடுத்த சிறப்பு... இரண்டாவது முறையாக வம்சியுடன் இணையும் பிரபல இயக்குநர்!

சென்னை : தெலுங்குப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படம் உருவாகவுள்ளது.

20 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் மீண்டும் குடும்ப பாங்கான கதையில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் வம்சியுடன் இணைந்து பிரபல இயக்குநர் பணியாற்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்திற்கு பிறகு பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் வெளியீடு

ஏப்ரல் வெளியீடு

இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையி சில பேட்ச் வேலைகள் மட்டுமே மீதமுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தப்பட அறிவிப்பு

அடுத்தப்பட அறிவிப்பு

இந்தப் படம் இன்னும் ரிலீசாகாத நிலையில், அதற்குள்ளாக தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை செய்தார் நடிகர் விஜய். தெலுங்குப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது.

குடும்பப்பாங்கான படம்

குடும்பப்பாங்கான படம்

இந்தப் படம் விஜய்யின் பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை போல குடும்பப் பாங்கான படமாக அமையவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகள் கழித்து விஜய் இத்தகைய படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

படத்தில் இணைந்த ராஜூ முருகன்

படத்தில் இணைந்த ராஜூ முருகன்

இந்நிலையில் இந்தப் படத்தில் புதிய இணைப்பாக பிரபல இயக்குநர் ராஜூ முருகன் இணையவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக வம்சி இயக்கத்தில் வெளியான தோழா படத்தில் வசனங்களை எழுதியுள்ள நிலையில் தற்போது மீண்டும் வம்சியுடன் இணைந்து தளபதி 66 படத்திற்கும் வசனங்களை எழுதவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தோழா படம்

தோழா படம்

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜூனா நடிப்பில் வெளியான தோழா படம் அதன் காட்சிகளுக்காக மட்டுமின்றி தமிழ் வசனங்களுக்காகவும் பேசப்பட்டது. இந்தப் படம் மிகசிறந்த வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அந்த சென்டிமெண்ட்டை கைவிடாமல் வம்சி இந்தப் படத்தில் ராஜூ முருகனையும் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதத்தில் சூட்டிங்

அடுத்த மாதத்தில் சூட்டிங்

தளபதி 66 படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தோழா படமும் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து வெளியான நிலையில், தற்போது அந்தப் படத்திற்கு வசனங்களை எழுதிய ராஜூ முருகன் இந்தப் படத்திலும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X