நா. முத்துக்குமார் மீது ராமுக்கு இவ்வளவு பாசமா?.. யப்பா வேற லெவல் நட்பு

சென்னை: ராமின் இயக்கத்தில் அடுத்ததாக பறந்து போ திரைப்படம் வெளியாகவிருக்கிறது.மிர்ச்சி சிவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படமானது ஜூலை 4அம் தேதி வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் மறைந்த கவிஞரும், பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் பற்றி ராம் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

பாலுமகேந்திராவிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு கற்றது தமிழ் படத்தை முதன்முறையாக இயக்கினார் ராம். ஜீவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. ஆனால் இப்போது பலரும் அதனை கொண்டாடிவருகிறார்கள். அந்த அளவுக்கு அப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் கூர்மையாக அமைத்திருப்பார்.

முக்கியமான இயக்குநர்: கற்றது தமிழ் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய தங்க மீன்கள் படமும் க்ளாஸிக் படமாகவே அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஆனந்த யாழை பாடலுக்காகத்தான் நா.முத்துக்குமார் சிறந்த பாடலசிரியருக்கான தேசிய விருதை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.ராமே அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து நடிகராகவும் அறிமுகமானார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.

Director Ram Emotional talks about Late Lyricist Na Muthukumar
Photo Credit:

பேரன்பு: பேரன்பு படத்தில் அஞ்சலி தன்னை ஏமாற்றியதை உணர்ந்த மம்மூட்டி, என்னையே ஏமாத்தற அளவு உங்களுக்கு எண்ணம் வந்திருக்குனா நீங்க என்னைவிட ஏதோ பெரிய கஷ்டத்தில் இருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்லும்படியான காட்சியை வைக்க ராமால் மட்டும்தான் முடியும். அந்த காட்சியில் அவ்வளவு பாடம் எடுத்திருப்பார் ராம். இப்போது அவர் ஏழு கடல் ஏழு மலை, பறந்து போ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

பறந்து போ ரிலீஸ்: இவற்றில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அப்ளாஸை அள்ளியது. பறந்து போ படமானது ஜூலை நான்காம் தேதி வெளியாகிறது.இதில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருக்கிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவையும், உணர்வையும் இப்படம் பேசவிருக்கிறது. முதன்முறையாக ராமுடன் சிவா இணைந்திருப்பதால் எப்படிப்பட்ட ஃபெர்பார்ம் செய்திருப்பார் என்பதை பார்க்கவும் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ராம் பேட்டி:இந்நிலையில் படம் ரிலீஸாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அப்படி தனியார் ஊடகம் ஒன்றுக்கு ராம் அளித்த பேட்டியில், "நானும் நா.முத்துக்குமாரும் ரொம்பவே க்ளோஸான நண்பர்கள். நான் தாம்பரத்தில் தங்கியிருந்தேன். அவர் கோடம்பாக்கத்தில் இருந்தார். க்விதை வாசிப்பதற்காக அவர் வருவர். அப்போதுதான் பழக்கமானோம்.

அருகில் வைத்துக்கொள்ள ஆசை: அப்போதிருந்து நாங்கள் ஒன்றாகவே பயணம் செய்ய ஆரம்பித்தோம். பல விஷயங்களை பேசிக்கொண்டே இருப்போம். நான் கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பும்போது அவரும் என்னுடன் தாம்பரம் வருவார்; அதேபோல் அவர் தாம்பரத்திலிருந்து கோடம்பாக்கம் செல்லும்போது நானும் அவருடன் செல்வேன். இப்படித்தான் எங்கள் பந்தம் இருந்தது. ஒரு நண்பனை அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசை இருக்குமில்லையா? அப்படித்தான் நா. முத்துக்குமார் எனக்கு" என்றார்.

More from Filmibeat

Read more about: ram ராம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X