கண்டிப்பாக ஏழு கடல் ஏழு மலை படம் உங்களுக்கு பிடிக்கும்.. உறுதியாக சொல்லும் ராம்

சென்னை: கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம். முதல் படத்திலிருந்தே வித்தியாசமான கதைகளை எடுக்கும் அவர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அவர் இப்போது நிவின் பாலியை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அஞ்சலி உள்ளிட்டோரும் அந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். எப்போதும் போல ராமின் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்தச் சூழலில் படம் குறித்து ராம் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராம். பாலுமகேந்திராவிடம் நா. முத்துக்குமார் மூலமாக உதவி இயக்குநராக சேர்ந்த ராம் அடிப்படையில் இலக்கிய அறிவு ரொம்பவே இருப்பவர். பெரும்பாலும் பிறரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை பாலுமகேந்திரா நிறுத்தியிருந்த நேரம். மேகம் என்ற குறும்பட கதையை பாலுமகேந்திராவிடம் சொல்லி அவரை ஒளிப்பதிவு செய்யவும் ஒத்துக்கொள்ள வைத்தவர். அதனை கண்டு அப்போது பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களே ஆச்சரியம்தான் பட்டனர்.

Ram Yezhu Kadal Yezhu Malai Soori

முதல் படம்: பாலுமகேந்திராவிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு கற்றது தமிழ் படத்தை முதன்முறையாக இயக்கினார் ராம். ஜீவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. ஆனால் இப்போது பலரும் அதனை கொண்டாடிவருகிறார்கள். அந்த அளவுக்கு அப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் கூர்மையாக அமைத்திருப்பார். குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் படித்தவரின் நிலைமை என்னவென்பதை பொட்டில் அடித்து சொல்லிய படம். அதனையடுத்து அவர் இயக்கிய தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்கள் அனைத்துமே கிளாசிக். தரமணி மட்டும் கொஞ்சம் சர்ச்சையை சந்தித்தாலும் அதுவும் பாராட்டையே பெற்றது.

பேரன்பு: பேரன்பு படத்தில் அஞ்சலி தன்னை ஏமாற்றியதை உணர்ந்த மம்மூட்டி, என்னையே ஏமாத்தற அளவு உங்களுக்கு எண்ணம் வந்திருக்குனா நீங்க என்னைவிட ஏதோ பெரிய கஷ்டத்தில் இருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்லும்படியான காட்சியை வைக்க ராமால் மட்டும்தான் முடியும். அந்த காட்சியில் அவ்வளவு பாடம் எடுத்திருப்பார் ராம். அதேபோல் திருநங்கையை காரில் ஏற்றிக்கொண்டு செல்லும் காட்சி; கடைசியில் அவரை தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டது என்று பேரன்பு உண்மையில் தமிழ் சினிமாவில் எப்போதும் கிளாஸிக்கல்.

ஏழு கடல் ஏழு மலை: பேரன்பு படத்துக்கு பிறகு அவர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோரை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி கடந்த வருடம் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இதுவும் ராம் ஸ்டைலில் உருவாகி கலங்கடிக்க செய்யும் என்று கூறிவந்தனர். மேலும் அந்த க்ளிம்ப்ஸ் காட்சிக்கு தங்களது வரவேற்பையும் அவர்கள் கொடுத்தார்கள்.

படம் பிடிக்கும்: இதற்கிடையே ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் ராம் கூறுகையில், "இதற்கு முன்பு நான் இயக்கிய நான்கு படங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும்; ஏழு கடல் ஏழு மலை படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். ஏனென்றால் இந்தப் படம் ஒட்டுமொத்த மானுடத்துக்கான காதலை பற்றி பேசுகிறது" என்றார்.

More from Filmibeat

Read more about: ram yezhu kadal yezhu malai soori
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X