ராஜமௌலியை வம்பிழுக்கும் ராம்கோபால் வர்மா..கடுப்பான ரசிகர்கள் !
ஹைதராபாத் : ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ராஜமௌலியின் RRR படத்தை தன்னுடைய நேகெட் படத்துடன் இணைத்து பேசி சர்ச்சைக்குரிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ராஜமௌலியின் ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி இவரை கேள்வியால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

எதிர்பார்ப்பு
பாகுபலியின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மிகப் பிரம்மாண்டமாக தயாராகிக்கொண்டு வரும் படம் RRR. இதில் தெலுங்கு திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இதில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் மிகப்பெரிய உச்சத்தில் எகிறி கொண்டிருக்கிறது.

சர்ச்சை இயக்குனர்
இந்தியா பட உலகில் சர்ச்சைக்குரிய இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா, எது சொன்னாலும் எது செய்தாலும் சர்ச்சைகளிலும் பிரச்சினைகளிலும் கொண்டு போய் முடியும் என்று இவர் மீது ஒரு பேச்சு உண்டு அது அவ்வப்போது உண்மையும்கூட. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்தும் பணியாற்றியுள்ளார். தமிழில் சூர்யா நடித்த ரத்தசரித்திரம் என்ற படத்தை இயக்கியுள்ள இவர் மேலும் ஜித்தன், திருடா திருடா போன்ற படங்களில் எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.

நேகெட்
இவர் ஹாலிவுட் பார்ன் ஸ்டார் மியா மல்கோவாவை வைத்து கிளைமாக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். கவர்ச்சியில் எந்த அளவுக்கு உச்சம் காட்ட முடியுமோ அந்த அளவுக்கு இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது அது ரசிகர்களிடம் நல்லா வரவேற்பும் பெற்றது. இந்நிலையில் கிளைமாக்ஸ் படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் பிகினி உடையில் மியா மல்கோவா நடித்து சண்டை மற்றும் கவர்ச்சி கட்சிகளுடனும் வெளியான அந்த ட்ரைலர் மிகுந்த வரவேற்பை பெற்று வந்த நிலையில் இப்போது நேகெட் என்ற தனது அடுத்த அடல்ட் கன்டென்ட் படத்தை எடுத்துள்ளார். இதை கேள்வி பட்ட அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

அடுத்த படம்
குறிப்பாக அந்த ட்ரெய்லரில் கடைசியாக சூரியன் உதிக்கும் காட்சி ஒன்றை வைத்திருப்பார். அது போன்ற காட்சி இதுவரை எந்த ஒரு படத்திலும் வெளிவராத நிலையில் அதைப் பார்த்த பலரும் வாயை பிளந்து எப்படி இப்படியெல்லாம் யோசிக்கராரு என்றவாறு அதை பார்த்து வந்தனர். அதே சமயம் சிலர் அந்தக் காட்சியை கலாய்த்தும் வந்தனர். இவ்வாறு கிளைமேக்ஸ் படத்தின் சூடே இன்னும் அடங்காத நிலையில் இவர் இப்போது நேகெட் என்ற சர்ச்சைக்குரிய மற்றொரு படத்தை எடுத்து அதன் டிரைலரையும் நேற்று வெளியிட்டுள்ளார்.

வம்பு இழுக்கிறார்
மேலும் இவர் நேகெட் படத்தை, ராஜமௌலியின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் பிரம்மாண்ட படமான RRR படத்துடன் ஒப்பிட்டு பேசி ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் if RRR has mindblowing visuals, NNN has mindfucking visuals என குறிப்பிட்டு படத்தின் டிரைலர் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த ராஜமௌலியின் ரசிகர்கள் இணையதளத்தில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

டிரைலர் ரீலிஸ்
அவர் கூறிய போல நேகெட் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது அந்த டிரைலரில் ஆபாசத்திற்கு பஞ்சம் இல்லாமல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெண் குளியல் அறையில் இருந்து நிர்வாணமாக நடந்து வருவதும், அதைப்பார்த்து வீட்டு வேலைக்காரன் ஓடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த படத்தை அவர் தனது சொந்த சேனலில் வெளியிட உள்ளதாகவும் அதற்கு ஒரு பார்வைக்கு 200 ரூபாய் கட்டணம் என இந்த படத்திற்கான வியாபாரத்தை இப்போதே தொடங்கி வைத்துள்ளார். இதைப்பார்த்த ராம்கோபால் வர்மாவின் ரசிகர்கள் எப்போது டிக்கெட் கவுண்டரை திறப்பீர்கள் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











