twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரேனாவ மறந்துட்டாங்களே.. அதுக்காகவா இந்த பிரச்சனை.. சர்ச்சை இயக்குநரின் அதிரடி டிவிட்!

    |

    சென்னை: அமெரிக்காவில் தொடரும் போராட்டம் குறித்து பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயது நபர் போலீஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

    இது தொடர்பாக வெளியான வீடியோவில், கருப்பு இன நபரின் அவரது கழுத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தனது முழங்காலால் நெரித்ததும், அவர் மூச்சு விட முடியவில்லை என கதறியதும் பதிவாகியிருந்தது.

    என்னை விபச்சாரி என்று அழைக்கிறார்கள்.. போட்டோவை போட்டு டாக்டரின் முகத்திரையை கிழித்த பிரபல பாடகி! என்னை விபச்சாரி என்று அழைக்கிறார்கள்.. போட்டோவை போட்டு டாக்டரின் முகத்திரையை கிழித்த பிரபல பாடகி!

    போலீஸ் கைது

    போலீஸ் கைது

    ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதி கேட்டு கருப்பு இன மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தை முழங்காலைக்கொண்டு நெரித்த போலீஸ் அதிகாரி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கண்டனங்கள்

    கண்டனங்கள்

    அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஹாலிவுட், பாலிவுட் என சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    தள்ளிவிட்டுவிட்டார்கள்

    இந்நிலையில் இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா, அமெரிக்காவில் தொடரும் போராட்டம் குறித்து டிவிட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில், அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் கொரோனா வைரஸை மைய நிலையில் இருந்து தள்ளிவிட்டுவிட்டனர்.

    கொரோனா பிரச்சனை

    கொரோனா பிரச்சனை

    எல்லோரும் கோவிட்-19 ஐ மறந்துவிட்டதாக தெரிகிறது என பதிவிட்டுள்ளார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

    கொரோனா மறக்கடிப்பு

    கொரோனா மறக்கடிப்பு

    18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்சனை மட்டுமே அமெரிக்காவில் பெரிதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் கொரோனா மறக்கடிக்கப்படுவதாக பேச்சு எழுந்துள்ளது.

    English summary
    Director Ram Gopal Varma has tweeted about US Protest. He says people forgotten covid -19.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X