விளக்கேத்த சொன்னா இப்படியா செய்றது.. சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குநர்.. வைரலாகும் போட்டோ!
சென்னை: இயக்குநர் ராம்கோபால் வர்மா பிரதமர் சொன்னப்படி விளக்கேற்றுவதற்கு பதிலாக சிகரெட்டை பற்ற வைத்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
Recommended Video
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரையும் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
தான் இறந்த பிறகு நடிகை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அடுத்தவர் மனைவி என்றும் யோசிக்காமல் கல்லறையில் இடம் கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தனக்கு கொரோனா
ஸ்ரீரெட்டி குறித்த சர்ச்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா, தான் எப்போதும் பெண்களுடன் வெளியில் போவதில்லை எல்லாமே உள்ளேதான் என்று டபுள் மீனிங்கில் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு கொரோனா இருக்கிறது என்று பதிவிட்டு தன்னை ட்விட்டரில் பின் தொடர்பவர்களிடம் விளையாடினார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

டாக்டருடைய தவறு
சிலர் நிஜமென்று நம்பி அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் கழித்து, உங்களுக்கு ஏமாற்றம் தருவதற்கு மன்னிக்கவும். அது ஏப்ரல் ஃபூல் காமெடி என்று என் மருத்துவர் சொல்லிவிட்டார். எனவே இது அவரது தவறுதான் என்னுடையது இல்லை என்று இன்னொரு பதிவைப் பகிர்ந்தார் ராம் கோபால் வர்மா.

9 நிமிடங்கள்
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
லைட்டுகளை ஒளிரவிட்டு
அதனை ஏற்று எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் உட்பட நாடு முழுவதும் பொதுமக்கள் பலரும் இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு வீட்டில் அகல் விளக்குகளையும் குத்து விளக்குளையும் ஏற்றி வைத்தனர். மொபைல் லைட், டார்ச் லைட்டுகளையும் ஒளிர விட்டனர்.

சிகரெட் பற்ற வைத்து
திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பிரதமர் மோடியின் இந்த கோரிக்கையை ஏற்று வீட்டில் விளக்கேற்றினார். இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு சிகரெட் பற்ற வைத்துள்ளார். அந்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெரும் சர்ச்சை
மேலும் தனது அடுத்த பதிவில், கொரோனா எச்சரிக்கையை மீறுவது என்பது, புகை பிடிக்காதீர்கள் என்ற அரசின் உத்தரவை மீறுவதைவிட மிகவும் ஆபத்தானது என்றும் கருத்து தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அவரது இந்த செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











