ராம்கோபால் வர்மாவின் அடுத்த திட்டம்.. கிட்னாப்பிங் பிளான் ஆப் கத்ரீனா கைஃப் !

ஹைதராபாத் : சில ஆண்டுகளாகவே குண்டக்க மண்டக்க படங்கள் எடுத்து தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா அடுத்த படத்திற்கான போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

இவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு நேகெட் என்ற புல் அண்ட் புல் அடல்ட் கன்டெண்ட் காட்சிகள் நிரம்பிய படத்தின் டிரைலரை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியிலும் ஒரு சிலரை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி வந்தார்.

அந்த டிரைலரில் படுமோசமான காட்சிகள், நிர்வாண காட்சிகள் என பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று அந்த பீதியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேக்கிங் ஸ்டைல்

சர்ச்சைப்படங்கள்

சர்ச்சைப்படங்கள்

இந்திய சினிமாவில் ஒவ்வொரு இயக்குனரும் அவர்களுக்கு தகுந்தாற்போல் ஒரு மேக்கிங் ஸ்டைலை வைத்துக்கொண்டு அவர்களின் அடுத்தடுத்த படங்களில் புதுமையை புகுத்தி ஆக்சன், காதல், காமெடி என படங்களைக் கொடுத்து வரும் வேளையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய செமயான மேக்கிங் ஸ்டைலை விட்டுவிட்டு இப்பொழுது சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

நிர்வாணம்

நிர்வாணம்

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இவர் இயக்கிய கிளைமேக்ஸ் படத்தின் டிரைலர் காட்சி வெளியானதையொட்டி அந்த டிரைலரில் வரும் பல காட்சிகள் பற்றி அனைவராலும் பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அதில் ஹாலிவுட் பார்ன் ஸ்டார் மியா மல்கோவா நடித்திருக்க படம் முழுக்க பாலைவனத்தையொட்டி படமாக்கப்பட்டு காதல், கவர்ச்சி, ஆக்சன், நிர்வாணம் போன்ற அனைத்து சர்ச்சைக்குரிய காட்சிகளாக நிரம்பி வழிந்த அந்த படத்தை தனது சொந்த சேனலில் ரசிகர்களுக்காக வெளியிட்டார்.

நமக்கு ஷாக்

நமக்கு ஷாக்

இந்த படத்தை வெளியிட்ட ஓரிரு வாரங்களிலேயே அவரின் அடுத்த படமான நேகெட் என்ற படத்தின் டிரெய்லரை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அதில் ஒரு பெண் நிர்வாணமாக அங்கும் இங்கும் ஓடும் வகையில் கேமராவை எந்த எந்த இடங்களில் எல்லாம் வைக்கக்கூடாதோ அந்தந்த ஆங்கிளில் வைத்து பல ஷாட்களில் நமக்கு ஷாக் கொடுத்து இருப்பார். இப்படி தனது படங்களின் மூலம் அட்டகாசம் செய்துவரும் ராம்கோபால் வர்மாவின் பார்வை தற்போது பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மீது சென்றுள்ளது.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

க்ளைமேக்ஸ் மற்றும் நேகெட் படங்களை தொடர்ந்து தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்தின் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார். "கிட்னாப்பிங் பிளான் ஆப் கத்ரீனா கைஃப்" என பெயரிட்டுள்ள அந்த படத்தின் போஸ்டர் தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு சுவரில் கத்ரீனா கைஃப்பின் படம் ஒட்டப்பட்டுள்ள நிலையில் நான்கு ஆண்கள் கையில் மதுபாட்டில்களுடனும், வாயில் சிகரெட்களுடனும் கத்ரீனா கைஃப் போட்டோவை உற்று பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் இவரை ஒருபுறம் புகழ்ந்து பாராட்டியும், மறுபுறம் கலாய்த்தும் வருகின்றனர். நீங்கள் இப்படி ஒரு படத்தை எடுக்குறீர்கள் என்று கத்ரீனா கைஃப்க்கு தெரியுமா எனக்கேட்டு கலாய்த்தும், இன்னும் சிலர் உங்களின் வேலை சுறுசுறுப்பு இடி இடிப்பதை விட வேகமாக உள்ளது என அவர் குறுகிய காலத்தில் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது படங்களை இயக்கி வெளியிடுவதைப் பற்றி புகழ்ந்து இருந்தார். எது எப்படியோ இந்த படத்தையும் அவர் கூடிய விரைவில் தனது சொந்த சேனலில் வெளியிட்டு கல்லாவை கட்டிவிடுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X