புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் சம்பளம்.. பிரபல இயக்குநர் சொன்ன தகவல்.. இவ்வளவு கோடியா?

ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது புஷ்பா தி ரூல். இந்த படம் நாளைய தினம் சர்வதேச அளவில் 12,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

பிரீ புக்கிங்கில் மட்டுமே புஷ்பா 2 படம் 100 கோடி ரூபாய்களை அள்ளியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் படம் ரிலீசாகவுள்ள நிலையில், முதல் நாளிலேயே படம் 300 கோடி ரூபாய்களை சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் குறித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

allu arjun pushpa 2 movie ram gopal varma

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் பெற்று வருகிறார். ஆயினும் அவரது கேரியர் பெஸ்ட் படமாக அமைந்துள்ளது புஷ்பா. கடந்த 2021ம் ஆண்டில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் அல்லு அர்ஜுனுக்கு பெற்றுக் கொடுத்தது. மேலும் அவரை பான் இந்தியா ஸ்டாராக மாற்றிய பெருமையும் இந்த படத்துக்கு உண்டு. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடி சேர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. படத்தின் வில்லனாக பகத் ஃபாசில் இணைந்துள்ள நிலையில் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார்.

புஷ்பா 2 படம்: புஷ்பா 2. படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள நிலையில் நாளைய தினம் சர்வதேச அளவில் இந்த படம் 12000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை கடந்த சில வாரங்களாகவே அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுகுமார், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, ஹைதராபாத், கொச்சி, மும்பை, பாட்னா உள்ளிட்ட அடுத்தடுத்த இடங்களில் படத்தின் ட்ரெயிலர், பாடல் வெளியீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

ரசிகர்கள் உற்சாகம்: படக்குழுவினர் சென்ற இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை பார்க்க முடிந்தது. இதுவே இந்த படத்திற்கான ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. இந்நிலையில் அதை மீண்டும் மீண்டும் படக்குழுவினர் நிரூபித்து வருகின்றனர். தற்போது பிரீ புக்கிங்கிலேயே படம் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ள நிலையில், நாளைய தினம் முதல் நாளிலேயே படம் 300 கோடி ரூபாய்களை சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிரபல இயக்குநர் பாராட்டு: பிரமோஷனுக்காக பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் இவர்கள் கலந்து கொண்ட நிலையில் சென்ற இடங்களில் எல்லாம் இந்த ஜோடி மாஸ் காட்டியது. ரசிகர்கள் படத்தில் இவர்கள் இருவரின் காம்பினேஷனை மிக அதிகமாக எதிர்பார்த்து காத்துள்ளனர். முதல் பாகத்திலேயே இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்திலும் அது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் குறித்து பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை இல்லாத வரவேற்பை புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், அல்லு அர்ஜுனை பிளானட் ஸ்டார் என்று பாராட்டியுள்ளார்.

அல்லு அர்ஜுன் சம்பளம்: இதற்கான காரணங்களையும் அவர் தன்னுடைய பதிவில் அடுக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபீசை தகர்க்கும் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் 287.36 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் அவர் உண்மையான உச்ச நட்சத்திரம் என்றும் பாராட்டியுள்ளார். மேலும் எந்த நடிகர்களுக்கும் அல்லு அர்ஜுனை போன்ற உயரங்கள் அமையாது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X