»   »  சன்னி போல் இன்பம், மகளுடன் ஆபாச படம் பார்ப்பது: ட்விட்டரில் இருந்து வெளியேறினார் சர்ச்சை கோவாலு

சன்னி போல் இன்பம், மகளுடன் ஆபாச படம் பார்ப்பது: ட்விட்டரில் இருந்து வெளியேறினார் சர்ச்சை கோவாலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இயக்குனர் ராம் கோபால் வர்மா திடீர் என்று ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக இருந்தார். சினிமா மற்றும் நாட்டு நடப்பு பற்றி கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்.

ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டுகளால் சர்ச்சையும் ஏற்பட்டது உண்டு.

வம்பு

வம்பு

பொழுது போகவில்லை என்றால் யாரையாவது வம்பும் இழுப்பார். அவர் வம்பிழுப்பதை பார்த்து சம்பந்தப்பட்டவர்களின் ரசிகர்கள் ட்விட்டரில் அவரை கழுவிக் கழுவி ஊத்தியதும் உண்டு.

மகள்

மகள்

திருமணமான மகளுடன் சேர்ந்து அப்பா ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது என்று அண்மையில் ட்வீட்டி நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளானார் ராம் கோபால் வர்மா.

சன்னி

சன்னி

உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன் என ராம் கோபால் வர்மா மகளிர் தினத்தன்று ட்வீட்டினார்.

ட்விட்டர்

ட்விட்டர்

சர்ச்சை மேல் சர்ச்சை கிளப்பிய ராம் கோபால் வர்மா 27ம் தேதி ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். இனிமேல் புகைப்படங்கள் மூலம் இன்ஸ்டாகிராம் வழியாக பேசப் போகிறாராம். அவர் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி ட்விட்டரில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Filmmaker Ram Gopal Varma has decided to quit micro-blogging site, Twitter. The 55-year-old director, who has had his share of Twitter fights and trolls, joined the social media platform on May 27, 2009.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil