“காதல் காதல்தான்“ லெஸ்பியன் திரைப்படம்.. மீண்டும் சர்ச்சை கதையை கையில் எடுத்த ராம்கோபால் வர்மா!

சென்னை : பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா காதல் காதல்தான் என்ற சர்ச்சைக்குரிய லெஸ்பியன் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

Recommended Video

லெஸ்பியன் திரை கதையை கையில் எடுத்த ராம்கோபால் வர்மா! | Ram Gopal Varma

இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 8ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இதில் நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே, கோதன் சிங் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ராம்கோபால் வர்மா. ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவர். இவருடைய படங்கள் எப்போது வெளியானாலும் அது ஏதாவது ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும்.

சர்ச்சை நாயகன்

சர்ச்சை நாயகன்

பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என பெயர் எடுத்த இவர் சோஷியல் மீடியாவிலும் எக்குத்தப்பான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். நடிகர், நடிகைகள்,அரசியல்வாதிகள், பிரபலங்கள் என ஒருத்தரையும் இவர் விட்டுவைத்தது இல்லை. இதனால், இவரது பெயரைக் கேட்டாலே பாலிவுட்டே பயந்து நடுங்குமாம். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் ஓபனாக பேசக்கூடியவர்.

18+ திரைப்படங்கள்

18+ திரைப்படங்கள்

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் க்ளைமாக்ஸ், நேகட் போன்ற 18+ திரைப்படங்களை ஒடிடியில் வெளியிட்டு இளசுகளின் மனதில் இடம் பிடித்தார் ராம் கோபால் வர்மா. அப்போதே பலரும் இந்த திரைப்படத்தில் வரம்பு மீறி ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றம் சாட்டினார்கள். ஆனால், எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களே எடுத்து வருகிறார்.

லெஸ்பியன் திரைப்படம்

லெஸ்பியன் திரைப்படம்

ராம்கோபால் வர்மாவின் மற்றுமொரு சர்ச்சைக்குரிய திரைப்படம் தான் காதல் காதல்தான். இப்படம் ஏப்ரல் 8 ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்திற்கு இந்தியில் டேஞ்சரஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆண்களை வெறுக்கும் பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இது இந்தியாவின் முதல் லெஸ்பியன் திரைப்படமாகும்.

இப்படி படம் எடுப்பது சரியா?

இப்படி படம் எடுப்பது சரியா?

காதல் காதல்தான் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், ராம்கோபால் வர்மா, நைனா கங்குலி, அப்சரா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் செய்தியாளர் ஒருவர், இப்போது பல இளைஞர்களுக்கு பெண்களை பிடிப்பது இல்லை பெண்களுக்கு ஆண்களை பிடிப்பது இல்லை. இது போன்ற நேரத்தில் லெஸ்மியன் கதையை இவ்வளவு பெரிய திரைப்படமாக எடுப்பது சரியா? என கேட்டார்.

படம் பிடித்துள்ளது

படம் பிடித்துள்ளது

இதற்குபதிலளித்த ராம்கோபால் வர்மா, இங்கு லெஸ்பியன் உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அவர்கள் குற்றம் இல்லை, அது ஹார்மோன் சம்பந்தப்பட்டது என்றார். மேலும் ‘Gay' படம் எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை பெண்களை வைத்து லெஸ்பியன் திரைப்படம் எடுப்பது தான் தனக்கு பிடித்துள்ளது என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X