சரக்கு கிளாஸ்.. கையில் மல்லிப்பூ.. நடிகைக்கு முத்தம்.. எல்லை மீறும் ராம் கோபால் வர்மா!

சென்னை : சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா மீண்டும் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பகிர்ந்து சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளார்.

ராம்கோபால் வர்மா, எப்போதும் எக்குத்தப்பான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என ஒருத்தரையும் இவர் விட்டுவைத்தது இல்லை. இதனால், இவரது பெயரைக் கேட்டாலே பலர் ஒதுங்கி போய் விடுவார்கள்.

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா, நாகார்ஜூனாவை வைத்து சிவா என்ற படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இப்படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து இந்தியிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

விவகாரமான படங்கள்

விவகாரமான படங்கள்

இதைத்தொடர்ந்து, ஸ்ரீ தேவியை வைத்து க்ஷானா க்ஷானம் என்ற படத்தை இயக்கி புகழின் உச்சிக்கு சென்றார். இதை தொடர்ந்து ரங்கீலா, பிரேம கதா, சத்யா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார். தமிழில் திருடா திருடா படத்தை இயக்கினார். பல வெற்றிப்படங்களை எடுத்து பெயர் எடுத்த இயக்குநர் ராம்கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளாக விவகாரமான படங்களை எடுத்து வருகிறார்.

டேஞ்சரஸ்

டேஞ்சரஸ்

அண்மையில் இரண்டு பெண்கள் காதலிக்கும் லெஸ்பியன் கதைக்களத்தை கொண்ட டேஞ்சரஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் அப்ஸரா ராணி, நைனா கங்குலி இருவரும் படுமோசமாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஊர் ஊராக சென்று ப்ரோமோஷன் செய்திருந்தார்.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம்கோபால் வர்மா, ஆஷு ரெட்டியின் காலடியில் அமர்ந்து கொண்டு, அவரின் காலை வருடி, ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் கொடுத்து, காலை கன்னத்தில் வைத்துக்கொண்டு பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்று கூறிய வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி ராம்கோபால் வர்மா கடும் விமர்சனத்திற்கு உள்ளனார்.

கால்களுக்கு மட்டுமல்ல.. கைகளும் கூட

கால்களுக்கு மட்டுமல்ல.. கைகளும் கூட

இந்நிலையில், இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் விவகாரமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், கிளாஸில் சரக்கு, கையில் மல்லிகைப்பூவை சுற்றிக்கொண்டு, ஒரு பெண்ணின் கைக்கு முத்தம் கொடுத்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ''கால்களுக்கு மட்டுமல்ல.. கைகளும் கூட'' என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த ராம்கோபால் வர்மா இப்படி மோசமாக நடந்து கொள்வதா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X