Ram gopal varma: யார் இந்த பெண்? யாராவது சொல்லுங்கள்.. பிரபல இயக்குநர் போட்ட போஸ்ட்!
சென்னை: பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பெண் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து யார் இந்த பெண் என கேட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ராம்கோபால் வர்மா.

ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது இவருடைய வழக்கம்.
ராம்கோபால் வர்மா: பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என பெயர் எடுத்தவர் ராம்கோபால் வர்மா, சோஷியல் மீடியாவிலும் எக்குத்தப்பான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். நடிகர், நடிகைகள்,அரசியல்வாதிகள், பிரபலங்கள் என ஒருத்தரையும் இவர் விட்டுவைத்தது இல்லை. இதனால், இவரது பெயரைக் கேட்டாலே பாலிவுட்டே பயந்து நமக்கு எதுக்குபா வம்பு என ஒதுங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் ஓபனாக பேசக்கூடியவர்.
சர்ச்சை இயக்குநர்: கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் க்ளைமாக்ஸ், நேகட் போன்ற 18+ திரைப்படங்களை ஒடிடியில் வெளியிட்டு இளசுகளின் மனதில் இடம் பிடித்தார் ராம் கோபால் வர்மா. அப்போதே பலரும் இந்த திரைப்படத்தில் வரம்பு மீறி ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றம் சாட்டினார்கள். ஆனால், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களையே எடுத்து வருகிறார்.
டேஞ்சரஸ்: வித்தியாசமாக படம் எடுக்கிறேன் என்ற சொல்லிக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக விவகாரமான படங்களை எடுத்து வருகிறார்.இரு பெண்கள் காதலிக்கும் லெஸ்பியன் கதையை கையில் எடுத்த ராம் கோபால் வர்மா, இந்த திரைப்படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியிட்டார்.
யார் இந்த பெண்: இந்நிலையில் ராம்கோபால் வர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பெண் ஒருவரின் வீடியோவை பதிவிட்டு,இந்த பெண் யார் என்று தெரிந்தால் தெரியப்படுத்தவும் என கூறியிருந்தார். இந்த வீடியோ 16 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளதோடு, 2 ஆயிரம் கமெண்டுகள் வந்திருந்தன. ரசிகர்களின் கமெண்டுகள் மூலம், அந்த பெண்ணின் பெயர் ஸ்ரீ லட்சுமி என்பது தெரியவந்துள்ளதாகவும், ஸ்ரீ லட்சுமிக்கு ஆர்வம் இருந்தால், மெசேஜ் அனுப்பும் மாறும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார். ராம் கோபால் வர்மாவின் இந்த போஸ்ட் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வரும் நிலையில், ஸ்ரீ லட்சுமிக்கு இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











