நிர்வாண கோலத்தில் ஹீரோ ஹீரோயின்.. சர்ச்சை இயக்குநர் வெளியிட்ட வில்லங்க போட்டோ!
சென்னை: தனது அடுத்தப்படத்தின் ஹீரோவும் ஹீரோயினும் ஆடையில்லாமல் இருக்கும் போட்டோவை இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்.
Recommended Video
இயக்குநர் ராம் கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். நடிகைக்கு பீர் அபிஷேகம் செய்தது, திரை நட்சத்திரங்களை சாடி பேசுவது, அரசியல்வாதிகளை விமர்சிப்பது என அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.
அண்மையில் தனது அடுத்தப்படத்தின் நாயகியான அப்சராவை அறிமுகம் செய்தார். அப்போது அவரை புகழ்ந்து பேசுவதற்காக ஒடிசா மாநிலத்தை மட்டம் தட்டி பேசினார்.

ஒரு மாதிரியாக..
இதனால் அம்மாநில மக்கள் அவரை வச்சு செய்தனர். ஆனால் அதற்கெல்லாம் அசராத ராம் கோபால் வர்மா, அடுத்தடுத்து தனது வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டு சென்றிருக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கில் பல படங்களை இயக்கியுள்ளார். சமீப காலமாய் இவர் இயக்கும் படங்கள் எல்லாமே ஒரு மாதிரியாக உள்ளது.

க்ளைமேக்ஸ், நேக்டு..
அதாவது செக்ஸை மையப்படுத்தியே உள்ளது ராம் கோபால் வர்மாவின் படங்கள். இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் க்ளைமேக்ஸ், நேக்டு என இரண்டு படங்களை தனது ஆன்லைன் தியேட்டரில் ரிலீஸ் செய்து கல்லாக்கட்டிய அவர், தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஃபாலோ அப்..
த்ரில்லர் என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் நாயகியை அறிமுகம் செய்தபோதே அவர் உள்ளாடைகளுடன் இருக்கும் போட்டோவைதான் ஷேர் செய்தார். மேலும் தனது படைப்புகளான க்ளைமேக்ஸ், நேக்டு படத்தின் ஃபாலோ அப் என்றும் கூறியிருந்தார் ராம்கோபால் வர்மா.

ஹீரோ அறிமுகம்
இதனால் இந்தப் படத்திலும் பலான காட்சிகள் பல இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது படத்தின் ஹீரோவை அறிமுகம் செய்தார் ராம் கோபால் வர்மா. ஒடிசாவை சேர்ந்த ராக் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர் ராம் கோபால் வர்மாவின் த்ரில்லர் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

ஆடையில்லாமல்..
மேலும், அப்சரா ராணியும் ராக்கும் இணைந்து இருக்கும் சில போட்டோக்களையும் ராம் கோபால் வர்மா ஷேர் செய்துள்ளார். அதில் இருவரும் ஆடையில்லாமல் இருப்பதாக தெரிகிறது. இருவரும் ஆடையில்லாமல் ஒருவர் மீது ஒருவர் படுத்தப்படியும் கட்டியணைத்தப்படியும் உள்ளனர்.

ஆபாச படம்..
அந்த போட்டோக்கள் பார்க்கும் போதே பயங்கரமாக உள்ளது. இது த்ரில்லர் படத்தின் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா. இதனை பார்த்த நெட்டிசன்கள், அடுத்து ஒரு ஆபாச படம் தயாராகி வருகிறது என பங்கம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











