twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அவர்கள் கொடூரத்தை நிறுத்தவில்லை...' பாலியல் வன்கொடுமை சம்பவத்தை படமாக்கும் சர்ச்சை இயக்குனர்

    By
    |

    ஐதராபாத்: 27 வயது கால்நடை மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா படமாக இயக்க உள்ளார்.

    ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயது கால்நடை மருத்துவர் ஒருவர், கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி பணியை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை, லாரி தொழிலாளர்கள் 4 பேர் திட்டமிட்டு பஞ்சராக்கினர்.

    பாலியல் வன்கொடுமை

    பாலியல் வன்கொடுமை

    பின்னர் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி கடத்திச் சென்றனர். அவர் கதறி அழுதும் கேட்காமல் வாயில் மதுவை ஊற்றி பாலியல் வன்கொடுமை செய்தனர். காரியம் முடிந்ததும் இரக்கமே இல்லாமல் கழுத்தை நெரித்துக் கொன்றனர். அவரது உடலை அருகில் உள்ள பாலத்துக்குத் தூக்கிச் கொண்டு சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

    திஷா ஹேஷ்டேக்

    திஷா ஹேஷ்டேக்

    இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. சமூக வலைதளங்களில் `திஷா' என்று பெயர் ஹேஷ்டேக் உருவாக்கினர். #justicefordisha என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். சிசிடிவி. கேமரா உதவியால் அந்த கொடுரர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    என்கவுன்டர்

    என்கவுன்டர்

    இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம், மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட பாலத்தின் அருகே, என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதில் 4 பேரும் உயிரிழந்தனர்.

    ராம்கோபால் வர்மா

    இந்நிலையில் இந்த சம்பவத்தை சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா படமாக இயக்க இருக்கிறார். இதுபற்றி அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், எனது அடுத்த படம், 'திஷா'. கொடூரமான திஷா பாலியல் வழக்குப் பற்றியது. நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நடந்த கொடூரமான கொலை இது.

    ஏன் கொன்றார்கள்

    அந்த பாலியல் வன்கொடுமையாளர்கள் பற்றியும் அவர்கள் ஏன் நிஷாவை கொன்றார்கள் என்பது பற்றியும் எனது படம் விரிவாக பேசும். பாலியல் வன்கொடுமையாளர்கள் முந்தைய பாலியல் வன்கொடுமையாளர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்களே தவிர பாலியல் வன்கொடுமைகளை நிறுத்தவில்லை. எனது படம், நம் எல்லோருக்கும் பயங்கரமான பாடத்தை உணர்த்தும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Ram Gopal Varma, who always bases his films on real-life incidents has now decided to make a film on rape of Disha in Hyderabad.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X